78 குடிதாங்கி எனக்கோர் உப காரம் குவலயம் கைக்கொண்டு முத்திகொடுப்பதுன்றன் பாரம் (இந்த) 3. ஒருவன் அறுபதினாயிரத் தோரை-கங்கை உதவிமுத்தி கொடுத்தானே பகிரதன்முன் னோரை இருநிலத்தில் அதுபோலஉன் பேரை எனக்கு முத்திதந்தாள்வாய்இப் பாரை (இந்த) 4. உள்ளத்தை உன்னோடே சொன் னேனே-முன்னாள் ஊமைகண்ட கனவாய் உள்ளடக்கி னேனே பிள்ளைக்கலி தீர்த்த பெரு மானே பெரும் புவிநீகொள்ள முத்திபெறவேணும் நானே (இந்த) 5. மலர்க்கையால் பிடிப்பாய் செங் கோலே-என்தன் வார்த்தை தடுக்காய் எனவே உரைத்தேன்ஒரு காலே தலைச்சுமை தந்தான் என்றென் மேலே தாழ்வாய் எண்ணாதே இனித தாங்காதென் னாலே (இந்த) 6. வாழையடி வாழையென மேலே-இந்த மண்டலத்தை ஆண்டதுண்டு மன்னர்ஒரு காலே சூழ்மதில் அயோத்தியை அது போலே-நீயும் சுமந்தாள் வேணும் என்தன் சொல்வழியி னாலே(இந்த) 7. குலத்தில் உள்ள குறையெல்லாம் வாங்கும்-உன்தன் குணத்தாலே உலகெல்லாம் மென்மேலே ஓங்கும் மலைக்கு மலையல்லவோ தாங்கும்-இந்த மண்டலத்தை நீதாங்கினால் என்கவலை நீங்கும்(இந்த) ------- ஐம்பத்தாறு தேசத்து ராஜர்கள் வருதல் விருத்தம்-2 ஈங்கிவை இப்படிமகனை இசையக் கூறி இனியதச ரதராசன் கணிதர் சொல்லப் பாங்குபெறு தேசரா சர்க்கு ராமன் பட்டாபி ஷேகம்இன்றைக் கறிவீர் என்றும் |