பக்கம் எண் :

79

நீங்களெல்லாம் அயோத்திநகர் வருவீர் என்றும்
     நினைப்பினால் தன்ஓலை அனுப்பி விட்டான்
ஆங்கவரும் மிகமிகச்சந் தோஷம் மீறி
     அந்தந்த தேசம்விட்டே அணு கினாரே

தரு-2

மத்தியமாவதிராகம்                        அடதாளசாப்பு

பல்லவி

வந்தனர் எங்கள் கலியாண - ராமச்
சந்திரன் முடிகாண                                     (வந்)
 

சரணங்கள்

1.    வந்தனர் அந்தந்த தேசத்துள்ளோர்       நாடும்
          மன்னன் ராமனைச் சொர்ணமுடி    சூடும்
     சந்திரிக ஓலையைக் கண்டெதிரே         கொண்டு
          தம்தலை மேல் வைத்துக் கண்களிலே ஒற்றி     (வந்)

2.    வங்களர் சிங்களர் மாளவர்            சோனர்
          மராடர் கன்னாடர் மகதர்        குருதர்கள்
     கொங்கணர் டங்கணர் குச்சரர்         மச்சர்
          குலிங்கர் கலிங்கர் தெலுங்கர்     முதலாக     (வந்)

3.   சேரலர் சாளுவர் உற்களர்             பப்பரர்
          சேதிபர் குந்தளர் சித்தர்அ       வந்திகர்
     ஆரியர் சீனர் விதர்ப்பர் வி           தேகர்கள்
          ஒளட்டர் பராஷ்டிரர் சுராஷ்டிரர்  முதலாக     (வந்)

4.   புண்டரீகக் கண் ராமனுக்கு                 முடி
          பூணச் செய்தான் இது காணப்பெற்றோம் என்று
     பண்டு ஐம் பத்தாறு தேசத்து               ராசரும்
          மன்றாடி மன்றாடிக் கொண்டாடிக் கொண்டாடி   (வந்)