பக்கம் எண் :

80

திரு அயோத்தியை அலங்கரித்தல்

விருத்தம்-3

    தேசதே சத்தில்வந்த ராசர் எல்லாம்
         தெசரதரா சன்முகந் தனிலே கூடி
    நேசமுடன் ராமனுக்கு மகுடம் சூட்ட
         நினைந்தபடி செய்யெனவே மகிழ்ந்து கூற
    ஆசகலும் அயோத்திமா நகரில் வேந்தன்
         ஆனைமேல் துந்துமிகள் அடிப்பீர் என்னப்
    பூசுரரும் ராசர்களும் அறிந்து கொண்டு
         பூரிப்பார் நகரம்அலங் காரிப் பாரே

திபதை-1

புன்னாகவராளி ராகம்                          ஆதிதாளம்

கண்ணிகள்

1.    விசைய துந்துபி                அடித்தார்-நகர் எங்கும்
          தசரதன் அருளியமொழி    படித்தார்
     திசைதிசை சொல்லி             விடுத்தார்-வாசலில்
          அசையும் விசைய கேதனம்  எடுத்தார்

2.    பூரண கும்பம்                  அமைத்தார்-தெருவெங்கும்
          தோரணம் அழகுடனே      சமைத்தார்
     வாரணம் அலங்                கரித்தார் - முனிவர்கள்
          ஆரணம் முறைமுறை ஆர்ப் பரித்தார்

3.   மாலிகை தொடுத்து                வைத்தார்-முத்து முளைப்
          பாலிகை பலபல படுத்து      வைத்தார்
     ஆலயம் விளக்கு                 வித்தார்-பூ மலர்ச்
          சோலையும் சாலையும் துலங்கு வித்தார்

4.   அத்திகள்                  பொருவாரும்-வெள்ளைவட்ட
          துத்துக் குடை பிடித்து  வருவாரும்
     சித்திரம்                  புனைவாரும்-சந்தன
          கஸ்தூரி களபத்தால்    நனைவாரும்

5.    சிந்தூரம்                 எழுதிடுவார்-பரிமளச்
          சந்தனத் தால் தரை   மெழுகிடுவார்