பக்கம் எண் :

81

     கந்தப் பொடிகள்               இறைப்பார்-மாவணப்
          பந்தலிட்டந் தரவெளி      மறைப்பார்

6.    வானவர்கள் வந்து             திரிவார்-அடிக்கடி
          மேனகை ஊர்வசி நடம்    புரிவார்
     கான வித்தைகள்               படிப்பார்-அதுக்கினம்
          ஆனகோகிலம் போலச்சதி   பிடிப்பார்

7.    அங்கே எதிர்                 சொல்லுவார்-இடங்காட்டி
          இங்கே இரும் இரும் எனச்  சொல்லுவார்
     சிங்காசனம்                    அணிவார் - கௌசலை
          கண்காணவே இணையடி    பணிவார்

8.    சடங்குகள்                    செய்வாரும்-சமித்துகள்
          இடம்படு தருப்பைகள்      கொய்வாரும்
     உடந்தையாய்த்                 திரிவாரும்-பொன்மழை
          இடங்கண்டவர்க் கெலாம்    சொரிவாரும்

9.    ரம்பையர்                     நடமாட-வீணையில்
          தும்புருநாரதர்             இசைபாட
     செம்பொன்                    மௌலிசூட-ராமற்குச்
          சம்பிரம் சொல்ல மன்னர்    எழுந்தோட

10.   சல்லரி பேரி                   தாளம்-துந்துமி
          மல்லரியொடு நரகெச       மேளம்
     சொல்லிய அண்ட               கோளம்-கிழிபட
          எல்லையும் குமுறிடுமே      நீளம்

11.   இப்படிக் கொண்                டாடி-ராமனுக்கு
          ஒப்பனை செய்வதேதென    நாடி
     அப்போது தோய்ப்              பாடி-கூனியும்
          வெப்புடன் வந்தாளேகுடி    கேடி

------

கூனி கைகேசியைக் கலைக்கவருதல்

விருத்தம்-4

துதித்திடும் அயோத்தி ஆளும சொர்ணமா முடிரா மற்கே
பதித்திட வேணு மென்று பலரும்ஆர்ப் பரிப்பக் கண்டாள்