பக்கம் எண் :

82

இதைக்கலைத் திடுவேன் என்று ராமன்வில் உண்டை யாலே
கொதித்திடும் மனத்தா ளான கூனியும் தான்வந் தாளே

தரு-3

மோகனராகம்                             ஆதிதாளம்

பல்லவி

கூனி வந்தாளே -பொல்லாத
    கூனி வந்தா ளே                         (கூனி) 

அநுபல்லவி 

     போனநாள் ராமன் செய்த பகையால்     காய்ந்து
         பூனைபோ லிருந்து புலிபோலப்         பாய்ந்து (கூனி) 

சரணங்கள் 

1. அடுக்குமோ ராமனுக்கு அரசொருக்       காலே
        ஆர்கொடுக்கிறார் அத்தை அறிகிறேன்  மேலே
     கெடுக்கிறேன் நான் என்று புறக்கடத்       தாலே
         கிணறு வெட்டப்பூதம் புறப்பட்டாற்     போலே (கூனி) 

2. பூமி பரதனுக்குத் தகும்என               உரைக்க
         பூவை கைகேசிதன் மனமதைக்         கரைக்க
      ராமன் பகையை நினைந்தடிவாய்          நுரைக்க
          நடுங்கிவிழுந் தலைந்து பெருமூச்       சிரைக்க (கூனி)

3. கொட்டிய பஞ்சுபோல் உடம்பெல்லாம்     தளர்ந்து
         கூனிகுறு குறுத்து வில்லைப்போல்      வளைந்து
       பட்டங்கட்ட ஒட்டுவேனோ நான்என்      றளைந்து
         பழைய பகையை எண்ணிப் பழமுள்ளு  களைந்து(கூனி) 

4. சந்தானதுபோய் முடங்கிய               காலி
         சனைபோலே நரைத்துத் திரங்கிய      தோலி
      இந்திராதி தேவருக்கு அனு              கூலி
         இலங்கை ராட்சதர்கள் குடிக்கொரு     நீலி (கூனி)