பக்கம் எண் :

83

கைகேசி கூனியைக் கோபித்தல்

விருத்தம்-5 

வந்ததொரு கூனிமன தெரிச்ச லாலே
        வல்லியெனும் கைகேசி தனைஎ ழுப்பி
    இந்தமன்னன் ராமனுக்கு மகுடம் சூட்ட
        எண்ணினான் என்னுமொழி சொல்லு முன்னே

    விந்தைமுக மலர்ந்துநல ரத்தின மாலை
        வெகுமானம் செய்திடவும் அவமா னித்துச்
    சிந்தைவஞ்சத் தொடுகலைத்த கூனி நாக்கைச்
        சேதிப்பேன் என்றுகைகை போதிப் பாளே 

தரு-4

ஆனந்தபைரவி ராகம்                      அடதாளசாப்பு

பல்லவி 

ராமனுக்கு மன்னன் முடிதரித்          தாலே
    நன்மையுண் டொருக்                காலே      (ராம) 

அநுபல்லவி 

பாமரமே உனக் கென்னடி             பேச்சே
    பழம்ந ழுவிப் பாலில் விழுந்தாற்போ    லாச்சே    (ராம)

சரணங்கள் 

1. இந்தவார்த்தை சொன்னாய் எனக்கெவர் நேரடி
         பிர்மமாதியர்களும் வரு           வாரடி
         இதுவே நல்ல                   சீரடி
          வாயா டாதே                   பாரடி
        ஆரடி எனக்குச்சரி                       (ராம)

2. பரசுராமன் கெர்வம்           தீர்த்தவன் டி
         நம்மை எல்லாம்           காத்தவன் டி
         பட்டங்கட்ட              ஏத்தவன் டி
         நாலு பேரில்              மூத்தவன் டி
        அவன் டி என்கண்மணி                  (ராம)

3. பரதன்பட்டம் கட்டாவிட்டால்   நட்டியோ
         அவன் சர்க்கரைக்         கட்டியோ