85 5. ஊருக்கோ பால் வார்த்துண்பது உடலுக்கோ பால்வார்த் துண்பது ஓதடி - செய்வ - தேதடி-அடி ஆருக்கும் பெண்ணே மண்பிள்ளையானாலும் தன்பிள்ளை என்பது அறியாயோ-ஒன்றும்-குறியாயோ 6. கௌசலை பிள்ளைக்குப்பட்டம் கட்டினால் உன்பிள்ளைக்கென்ன கட்டுவாய்-எவரைக்-கிட்டுவாய்-பரதன் தவசியாய் சந்நியாசியாகிப் பரதேசம் போவதேநல்ல சமர்த்தடி-கோபத்தை-அமர்த்தடி 7. சீரான கோசலை வீட்டுச் சிறுக்கிக்கும் சிறுக்கியாக செகுத்தாயோ-என்னை வகுத்தாயோ-அடி யாரார்கையிலென்ன படவேணுமோ அதெல்லாம் பட லபித்ததே-தெய்வம்-சபித்ததே 8. பலநாளும் உன்னோடே நான்தான் பாடுபட்டதெல்லாம் வீணே பாதகி-அடி-தோதகி-ஐயோ இலவுகாத்த கிளிபோலே போகவோநான் உன்னைநம்பி எண்ணினேன்-வீம்பு-பண்ணினேன் 9. நண்ணும் தன்மகன் மேலேபோல் உன்மகன்மேலே கோசலை நைவாளோ-பட்சம்-செய்வாளோ-அடி கண்ணில் எண்ணெயே கரிக்கும் பிடரியில் எண்ணெய் தானென்ன கரிக்குமோ-அன்பு-தரிக்குமோ 10. நாயகன் கோசலை பிள்ளையாகில் உனக்கென் னவரும் நன்மையே-சொல்வாய்-உண்மையே-ஆர்க்கும் தாய்கையிற்பசும் பொன்னிலும் தன்கையில் தவிடேமேலாம் தையலே-இதென்ன-மையலே 11. என்ன செய்வேன் என்கிறாய் நீ முன்னே கொண்ட வரம் இரண்டும் இல்லையோ-தரச்-சொல்லையோ-அந்த மன்னவன் உனக்குச் சொன்ன வார்த்தைக் கிரண்டு சொல்வானோ வாங்கடி-இதுவே-பாங்கடி 12. ஒருவரம் பரதன் நாடாள-ஒருவரம் ராமன் காடாள ஓதடி-இதே-சூதடி-இந்த |