86 இருவரமும் கொண்டால் உனக் கீடுசோடுண் டோடிமக ராசியே-என்தன் கை - கேசியே -0-0- கைகேசிக்கும் சக்கிரவர்த்திக்கும் சம்வாதம் விருத்தம்-7 அந்தவகை கூனிசொல்ல மனது வேறாய் அப்படியே செய்வேனென மானம் செய்து கொந்தளகம் சோரவளை சோர மண்மேல் குப்புறவே கிடந்திடுகை கேசி தன்னை வந்ததச ரதராசன் கையால் தூக்கி மலர்மேனி துடைத்தெனது மானே தேனே பைந்தொடியே உன்குறையே தெனப், பட்டோலை படிக்கின்றாள் தசரதனும் துடிக்கின்றானே. திபதை-3 நீலாம்பரி ராகம் ஆதிதாளம் கண்ணிகள் 1. இந்த அலங் கோலமும் இந்தமனோ துக்கமும் ஏன்வந்ததோ கைகை மின்னரசே-உன்தன் சிந்தையில் நினைந்ததை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெரியச் சொல்லாய் கைகை மின்னரசே 2. மருவும் மலரும் போலப் பாலும் நீரும்போல மானம் வைத்தாண்டீரே மன்னவரே-உந்தன் கருவிழி மணிபோலக் கரிசனம் ஆகஎன்னை கண்ணுண்டாய்க் காத்தீரே மன்னவரே 3. காத்ததற் கென்னகுறை இப்போதும் என்னஉன்னைக் கைநழுவ விட்டேனோ மின்னரசே-நீ பார்த்தெது கேட்கிலும் எந்தவரமானாலும் பரிந்து தருகிறேன் காண் மின்னரசே 4. மற்றொன்றும் இல்லைவரம் எனக்குமுன் நீர்கொடுத்த வரம்இரண்டும் கேட்கிறேன் மன்னவரே-என்றும் |