87 உற்றதுசொன்னால் அல்லோ அற்றதுபொருந்தும் நான் உள்ளது சொன்னேன் காணும் மன்னவரே 5. அந்தவரம் இரண்டும் தந்தேன் இனிஉனக்கு அட்டிசொல்வேனோ கைகை மின்னரசே-உன் மைந்தன் ராமன்ஆணை வார்த்தை பிரட்டறியேன் வாங்கிக் கொள்வாய் கைகை மின்னரசே 6. முன்ஒருவரம் பரதன் நாடாள மாணிக்க முடிபெற வேணும் அய்யா மன்னவரே-அதின் பின்ஒருவரம் ராமன் காடாளச் சடைமுடி பெற வேணும் தாரும் அய்யா மன்னவரே 7. மலைப்போல் ஒருவர்செய்த வஞ்சனையோ என்ன வார்த்தை சொன்னாய் கைகை மின்னரசே-அது கலைப்பார் கலைத்தாக்கால் கல்லும் கரையுமென்ற கதைபோல ஆச்சுது கைகை மின்னரசே 8. கலைப்பாள் கௌசலை உமக்குண்டெனக் குவேறே கலைப்பார் ஒருவரில்லை மன்னவரே-நீர் சலத்தால் சொல்லுகிறீரோ சொன்னதே சொன்னதுநான் தடுமாறிச் சொல அறியேன் மன்னவரே 9. மூத்தவனைத் தள்ளிவிட்டு இளையவனைப் பட்டங்கட்டல் முறைமை அல்லவே கைகை மின்னரசே-யாரும் ஏத்தும் மனுவிக்யானசாஸ்திரத்தினில் முன்னம் இசைத்த படிஇதுவே மின்னரசே 10. மூத்தவன் இந்திரனோ உபேந்திரனோ அகிலாண்டம் முழுதும் செலுத்துகிறான் மன்னவரே-வெகு நேத்தியிது முன்சொன்ன வார்த்தையை விட்டுசாஸ்திர நெறிகள் போதிக்கல் ஆமோ மன்னவரே 11. ஆனை இருந்து கொண்டு அரசாளும் மண்டபத்தில் அறியாப் பிள்ளை பரதன் மின்னவரே-சிறு பூனை இருந்துகொண்டு புலம்புகிறது போலப் புலம்பல் ஆமோ கைகை மின்னரசே |