பக்கம் எண் :

89

20.   தாரைநீர் ஏற்றபோதே என்சரீரம் உமது
          தம்சரீரம் அல்லவோ            மன்னவரே-நீர்
     ஆரைக்கும் பிடுகிறீர் ஆர்காவில் விழுகிறீர்
          அசலார் என்றெண்ணலாமோ      மன்னவரே

21.   அடியில் விழுவேன் என்றும் அடங்கி ஒடுங்கியேநான்
          அனந்தம் வார்த்தை சொல்லியும்   மின்னரசே-சற்றும்
     கடினம் இல்லாதுபோலே ஈரச்சீலையைப் போட்டு
          கழுத்தை அறுக்கலாமோ          மின்னரசே

22.   காட்டுப் புறாவுக்காகச் சதையரிந்த மன்னனை
          கதையிலும் கேட்டிலீரோ          மன்னவரே-உந்தன்
     வீட்டுப்பெண் சாதிக்காக இத்தனை சாகசமும்
          வேணுமொ போதும் போதும்      மன்னவரே

23.   கண்ணும் கருத்தும் ராமன் கண்ணாளனும்  ராமன்
          காப்பவனும் ராமனே            மின்னரசே-நான்
     எண்ணும் தெய்வமும்அவன் அவன்போனால் என்உயிர்போம்
          இருக்கச்சொல் என்பாய் கைகை   மின்னரசே

24.   எனக்குப்பொய் வாராது பொய்சொன்னால் தோஷமென்றீர்
          எந்த மதியாற் சொன்னீர்         மன்னவரே-நான்
     வனத்தில்போச் சொல்லும்என்ற சொல்திருப்பி விட்டாலது
          மகத்தான பொய்யல்லவோ        மன்னவரே

25.   ஆனால் ராமனை வனத்திற் போகச் சொல்வதால்
          ஆவதுண்டோ கைகை           மின்னரசே-அருங்
     கானிலே ராமனைப் போகச்சொல்வ திலும்என்
          கண் கேட்கிலும் தருவேன்        மின்னரசே

26.   நானாகச் சொல்லவில்லை தெய்வம் சொல்லியத் துக்கு
          நான் என்ன செய்வேன் காணும்   மன்னவரே-ராமன்
     போனாலும் கானகத்திலே அவனுக்கு வரும்
          பொல்லாங்கும் உண்டோ சொல்வீர் மன்னவரே

27.   போவென்று சொன்னவுடன் பொறிகலங்கி என்சீவன்
          போய்விடுமே கைகை            சண்டாளி-நான்
     ஆஎன்று போனபின்னை அள்ளி இடுவார் உனக்கு
          ஆரடி கைகேசி                 சண்டாளி