90 28. ஒட்டாரம் கட்டுகிறாய் ராமன் போனால் என்சீவன் உடனே போமடி கைகை சண்டாளி-நீ கட்டியதாலிக் கயிற்றை உன் மகற்குப் பட்டங்கட்ட காப்புகட்டடி கைகை சண்டாளி 29. வரதமுனிவனான வதிஷ்டமுனியே உன்னை வரம் கேட்கிறேன் தாராய் என் தெய்வமே-அந்த பரதன் வந்தால் அவன் உற்றுரிமை செய்யாமல் பத்து தரமாய் சொல் என் தெய்வமே 30. அண்டர் முனிவர் அல்ல பகையாளிகள் அல்ல அசலார் ஒருவர் அல்ல தெய்வமே-தீமுன் கொண்டபெண் சாதிதானே தசரதன் ஆவிக்கு கூற்றுவன் ஆய்வந்தாளே தெய்வமே 31. ஒளிவாய் இருந்துகொன்ற பிள்ளைப் பழிக்குமுனி உரைத்த சாபமிதுவோ தெய்வமே-உலகம் எளியாரை வலியார் அடித்தால் வலியாரைத் தெய்வம் கேட்கும் என்பது இதுதானோ தெய்வமே 32. பண்ணிட்ட எறும்புக்கா புருஷனைக் கொல்லவந்த பாவிதன்பெண் இவள்அல்லோ தெய்வமே-இந்த மண்ணுக்குள் தாயைப் பார்த்துப் பெண்ணைக்கொள் என்றுசொல்லலும் வசனம் பிசக வருமோ தெய்வமே 33. உதிக்கும்கண் போனாலென்ன உயிர்போனாலும் என் உத்தமன் ராமன் மாத்திரம் தெய்வமே-அயோத்தி பதிக்குப் பதியாகியே இருக்கிறான் என்றுகாணாப் பாவிநான் ஆயினேனே தெய்வமே ------ கைகேசி ஸ்ரீராமரை வனத்துக்கு ஏவுதல் விருத்தம்-8 கொன்றவன்போல் தசரதனிப் படிபு லம்பக் கூற்றுவன் போல் கைகேகி ராமன்தன்னை |