பக்கம் எண் :

10 செய்தக்காதி நொண்டி நாடகம்

    29. கட்டுவி தானங்க ளுமெல்லாங்
             கண்டிருந் தேன் மனங் கொண்டிருந்தேன்
        பட்டுர விக்கைக் குள்ளேவைத்த
             பச்சிள நீர்தந்தா ளுச்சிதமாய்

    30. உச்சிநகம் பதித் தேயித
            ழுண்டுகொண் டேன்சுகம் கண்டுகொண்டேன்
       மெச்சிச்ச பாசென வேகட்டி
           மேவிக்கொண்டாள் குரற் கூவிக்கொண்டாள்

     31. கொண்டாடி முத்தமிட் டாள் மிகக்
           கொஞ்சிச் சரசத்தின் மிஞ்சிக் கொண்டாள்
        கண்டாசை கொண்டவர் போ லெனைக்
           கைகலந்தாளதின் மெய்ம்மறந்தேன்

     32. மெய்வேர்வை மாறுமுன்னே பாக்கு
            வெற்றிலையும் புகைச் சுற்றுந் தந்தாள்
        கைவேர்வையும் மருந்தும் பல
            காரத்துடன் கூட்டிச் சேரத்தந்தாள்

     33. தந்தம ருந்தா லேமிகத்
            தள்ளாடித் தள்ளாடி யுள்ளாகிச்
        சிந்தை தடுமா றியொட்டுச்
           சிட்டுப்போல் நானகப் பட்டுக் கொண்டேன்

    34. கொண்ட பயல்போ லக்கூடற்
           கொங்கையுள் வைத்தென்னைச் சிங்கிக்கொண்டாள்
       உண்ட மருந்தா லேகையி
           லுள்ள தெல்லாங் கள்ளி கொள்ளை கொண்டாள்