பக்கம் எண் :

நொண்டியின் வரலாறு9


    23. பத்திசேருந் தூணருகே நின்று
             பார்த்தா ணமக்கிவள் வாய்த்தாளென்றே
        கொத்துலாவும் பூங்குழ லாளந்தக்
             குங்குமக் கோதைம ருங்கிற்சென்றேன்

     24. சென்றேனைக் கைப்பிடித் தாளெந்தத்
             தேசமு மக்கென்று பேசிக்கொண்டாள்
         நன்றாச்சென மகிழ்ந் தேயென்தன்
             நாட்டைச் சொன்னேன்வாரும் வீட்டுக்கென்றாள்

    25. என்றா ளருந்துமென் றாள்கையி
            லாகுந்தந் தாளிலைப் பாகுந்தந்தாள்
       மன்றா ரறிந்திட வேயிறு
            மாப்புட னேமனை போய்ப்புகுந்தேன்

    26. புகுந்தேனை யாதரித் தாள் தங்கள்
            பூருவசி நேகம் போல் சோறுந்தந்தாள்
       மிகுந்த பரிமளமு முடல்
           மீதினிற்பூசச் சவ் வாதுந்தந்தாள்

   27. தரளத்து ணைமுலை யாள்வாயிற்
          தம்பலந் தந்தாள்க ரும்பது போல்
      அருளேய தென் சொலு வேன்குளி
          ராட்டிக் கொண் டேமச்சு வீட்டிற்சென்றேன்

   28. வீட்டிற் பரிமளமுங் கட்டின்
         மெத்தையுஞ் சுற்றினிற் சித்திரமும்
      பூட்டுந்தி ரைத்துகி லுஞ்சொக்கப்
         பொற்கட்டி யாற்கட்டு மேற்கட்டியும்