35. கொள்ளைகொ டுத்தவர்போல் நானுங் கோப்புக்கெட் டேனொடுங் காப்புலிநான் தள்ளத் தள்ளத் திரிந்தே னவள் தாய்ப்புலிக் குள்ளானேன் ஈப்புலி போல் 36. புலிபோல வீறிடு வாள் வாடா போருக்கென்பாள் போடா வூருக்கென்பாள் கலியோ விதிப்படி யோ சொக்கர் கற்பனை யோமாமி சற்பனையோ 37. சர்ப்பமுங் கீரியும்போல் மாமி சன்னமிட்டா ளூரிற் கன்னமிட்டேன் பொற்பூ டணம்புடவை கண்ட பொன்னையெல்லாங் கொண்டு முன்னர்வைத்தேன் 38. வைத்தேன் மனங்குளிர வெறு வாய்க்கிலையுங் கெட்ட தாய்க்கிழவி அத்தை வகைக்காரி பின்னு மாதரித்தாளதி லேதரித்தேன் 39. தரித்தே னொருமாத மங்கு சஞ்சரித் தேன்வல்லி பஞ்சரித்தாள் சிரித்தே முகம்பார்த்தா ளொரு சின்னச் சிறைவேண்டு மென்னச்சொன்னாள் 40. சொன்ன வயணமெல்லா மவள் தோத்திரமாச்சொன்ன மாத்திரத்தே பொன்னேம டமயிலே யிதோ போரேன் சிறைகொடு வாரே னென்றேன் |