41. கொண்டுவாரே னென்றெழுந்தேன் மயிர்க் கூச்செறிந்தாள் பெரு மூச்செறிந்தாள் பெண்டுபோலக் கண்ணீர் சொரிந்தா ளென்மேற் பேதலித்தாள் மனங் காதலித்தாள் 42. காதல் கொண்டாரெனவே யென்னைக் கட்டிச் சிணுங்கிக்கும் பிட்டுக்கொண்டாள் பேதைமு கம்வாடி யொரு பேச்சும்விட்டாள் பெரு மூச்சும் விட்டாள் 43. தொழுது கடன்கழித் தாளவள் தோத்திர மாநின்ற மாத்திரத்தே பொழுது விடிந்தது பின்னீரும் போய்வாரு மென்றவள் தாயுஞ் சொன்னாள் 44. சொன்னபடி துணிந்தே யீசர் சொக்கரையும் பணிந் தக்கணமே பின்னற் கருங்குழலா ளாரை பின்னிழுக்க விதி முன்னிழுக்க 45. இழுக்கொன்றும் பாராமற் காக மேவினதுங் குயிற் கூவினது மொழுக்க மென்றேநினைந்தே சென்றே ஒல்லைவிட்டே திண்டுக் கல்லில்O வந்தேன் 46. வந்தேன் கடைத்தெரு விலங்கு வங்கணமாக்கண்டேன் சிங்கணனைச் சந்தோஷ மாச்சுதென் றே சோறுந் தண்ணீருந்தந்தவ னுண்ணு மென்றான் |