பக்கம் எண் :

நொண்டியின் வரலாறு13


    47. உண்டேன் பசிதீர்ந் தேனவ
             னொத்தாசை யாலங்கு நித்திரையுங்
         கொண்டே னெழுந்திருந்தேன் கோழி
             கூப்பிடு முன்வேளை வாய்ப்பெனவே

     48. வேறொன்றும் பாரா மற்போனேன்
             வெற்றிச்சிறகிட மொன்றிச் சென்றேன்
         ஏறொன்று வெம்பரி யார்செவ்வந்
             தீசரைக்O கும்பிட்டுப் பூசை செய்தேன்

    49. செய்யாருங்காவேரி யாடிச்
            சீரங்கமா Oனம காரங்கத்தி
       லையர் பதந்தொழுதேன் தொழு
            தஞ்சாறு நாளங்கு சஞ்சரித்தேன்

    50. சரித்திர மெல்லாங் கேட்டே யென்னைச்
           சந்தித்துப் பேசவுஞ் சிந்தித்துக் கொண்
       டொருத்தன்றிருப்பதி யானந்த
           வூரில்வந்தா னவன் பேருஞ் சொன்னான்

    51. பேரான கள்ளனென் றானவன்
          பேச்சுக் கண்டேன்றுணை யாச்சுதென்றே
       நீராரெனப்பகர்ந் தானந்த
          நேரத்தி லென்வழி சேரச் சொன்னேன்

    52. சொற்கேட்டகமகிழ்ந் தானொரு
          சோடா விருவருங் கூடிக்கொண்டே
       பொற்கோ புரவா யிலங்கு
          போயதிற் சத்தியம் செய்து கொண்டோம்