பக்கம் எண் :

14 செய்தக்காதி நொண்டி நாடகம்

    53. கொண்ட திருவரங் கரிசை
           கோவடி மைத்தொழிற் றேவடியாள்
       தண்டா மரைமுகத் தாளெனுஞ்
           சந்திர கலாவல்லி சிந்தாமணி

    54. சிந்தைகளி கூர ரொக்கஞ்
           செங்கையி லேபண யங்கொடுத்தோம்
       அந்திப்பொழுதுத னிற் சென்றாங்
           காளுக்கோர் தேவடியாளைத் தொட்டோம்

    55. தொட்டகலவியி லேயென்னைத்
           தோய்ந்தவள் கண்டூங்கிச் சாய்ந்துவிட்டாள்
       நிட்டூரமாநினைந் தேகடு
           நித்திரையிற் சொக்குப் பொடித்தூவினேன்

    56. தூவியன்ன மென்னடையா ளிட்ட
           தோடுஞ்ச வடியும் பாடகமுங்
       கோவை முத்து மாலையுடன் முத்துக்
           குச்சுவச்ரக் கொப்புக் கச்சுடனே

    57. உடைமைகளுள்ள தெல்லாங் கட்டி
           யொக்கச் சுருட்டிய டக்கிக் கொண்டே
       திடமா வெழுந்திருந்தே னந்தத்
           திருப்பதிக் கள்ள னிருப்பிடத்தே

    58. இருபேருங் கைகலந்தே யதி
          லேங்கிக்கலங்கிக் கண் டூங்கிவிட்டான்
       சரிசாம வேளையிலே யவன்
          றன்னையு முச்ச வென்றந் நேரம்