பக்கம் எண் :

மக்களின் பதற்றம்19


    81. சூழ்ச்சமதாத்துலுக்க ரினிப்போர்
            துடிப்பார் சிறைகளும் பிடிப்பாரென்
        றாட்சிமனம் வெறுத்ததென்றே யிருந்தம
            ராடினாரென்றுகுடி யோடினாரே

     82. வீட்டையும் பாரா மற்கச்சு கட்டின்
           மெத்தையுந்தலையணை குத்துவிளக்கு
        மாட்டையும் பாரா மல்நடந்தோடி
           வாரா தமக்களையும் பாராமலே

    83. காட்டினிற் புகுவாரும் வாஞ்சித்த
          கைக்குழந்தை ஒக்கலை இடுக்குவாருந்
       தேட்டத்திலிச்சையுடனே மனதினிற்
          றிடப்படப் பதுங்கியே கிடப்பாரும்

    84. அருமைக்குழந்தைகளை யேதப்பவிட்
          டலைவாரை யெண்ணவுந்தான் றொலையாதே
       பொருமிப்பொருமியழுதே யங்கங்கே
          போவாருமனமிகவே நோவாரும்

    85. அலைந்திடும் பட்சி போலே காட்டினிற்சென்
          றடைவாரும் பசியினா லிடைவாருந்
       தலைவிதியிதுவென வேமடங்களிற்
          றரிப்பாருந் தூங்கமுந்தி விரிப்பாரும்

    86. தப்பவகை யில்லா மலகப்பட்டுத்
          தவிப்பாருஞ்செங்கைகளைக் குவிப்பாரும்
       இப்படிச் சனங்களெல்லா மனதுநொந்
          தேங்கிக் குடிவலசை வாங்கினாரே