93. நலம்புனை சுலூபுகான் கூடாரத் தாசார வாசலதுவுங்கண்டேன் ஈடற்ற படைநெருங்கும் வங்கார ஏசப்ப நாயக்கன் வாசல் கண்டேன் 94. கூடாரவாயிலி லேலாடர்கள் கூட்டமும் பக்கீருக் * கூட்டங்களுஞ் சோடாக விருக்கக் கண்டேன் மனதினிற் சூழ்ச்சியொடு கையெடுத்துத் தாழ்ச்சி செய்தேன் 95. ஆவுரே கான்சே ஆயெ வென்றார் சாகிபுநான் ஆபுலக்கா புலத்தெ ஆயெவென்றேன் காவுரே கானாவென்றா ரிதுநல்ல கருமமென்றேசென் றருகிருந்தேன் * 96. கடைபடு கஞ்சாத் தண்ணீர் பாத்திரத்திற் கட்டளையிட்டார்பிரமன் கட்டளையென்றே யிடையூறு பேசாமல் மண்டிபோட் டிருந்து பிசுமிச்சொல்லி * யருந்தினனே 97. கறிகளும் ரொட்டிகளும் அவரவர் கைதோறு மெய்வழக்கஞ் செய்தார்களே அறிவுள்ள பெரியவர் போல் நானுமதை ஆசாரத்தோடு கொண்டேன் கூசாமலே 98. கலங்கிய பங்கிவெறி யால் கண்சிவப்புங் கலந்திடநாவும் பல்லும் உலர்ந்திடவே மயங்கிடுதியக்க மொடு காலுங்கையு மடக்கியொருபுறத்தில் முடங்கினனே |