105. காத்திருந் தேவல்செய்யும் பயல்கள்வங் கணமாச்செ னக்கதுவுங் குணமாச்சே சூத்திர மாக்குதிரைப் பாஷையுந் தொழிலையுங் கிரகித்தேன் வழிவசமாய் 106. வாசியைக் களவுசெ யவின்றமா வாசையிருட்டுவந்து வாச்சுதென்றே ஈசலைப் போலொடுங்கித் தனித்தோ ரிடத்தினிற்சென்று நான் படுத்தேனே 107. ஒளித்துப் படுத்திருந்தே பேசாம லூமனைப் போலநடுச் சாமத்திலே விழித்தே யெழுந்திருந்தே கச்சைக்கட்டை மெல்லவிறுக்கிக் கொண்டேன் சல்லடத்தை 108. கண்ணுக்குத் தெரியாத குளிகையுங் கட்டிக்கொண்டேன்திலத மிட்டுக் கொண்டேன் எண்ணிக்கை யினிலில்லாப் பாளைய மிறங்கின பேரெல்லாம் முறங்கக் கண்டேன் 109. மாயமா யொன்றியொன்றிப் போயிது நல்ல வாய்ப்பென்று கூடாரம் பொய்ப்புகுந்தேன் தேயத்திற் கிடையாத வுத்தமத் தேசியைப் பிடிக்கவு பாயமிட்டேன் 110. மரகத மலைதனை யேயுருச்செய்து வைத்துக் கடைந்தெடுத்த சித்திரமொத்த குரகதத்த ருகுசென் றேன்காலைத் தொட்டுக் கும்பிட்டேன் மேலிற்றொட்டு முகந்தடவித் |