117. பந்தமும்பகல்வத்தி யுந்தீவட்டியும் பார்த்ததிசைதொறுங்கண் பூத்திடவே யந்தவல்லிருட்டையெல் லாம்பட்டப்பக லாக்கினார் திசையெங்கும் நோக்கினாரே 118. தெற்றிய குடிசைகளும் புல்லுக்கட்டும் திரைகளும் காணக்கொப் பரைகளுடன் சுற்றிய விடுதிகளும் இடம்பெறச் சோதித்தா ரென்றுமனம் பேதித்தேனே 119. துருத்திக்குட் பதுங்கிக் கொண் டுகிடப்பது துறையல்ல தப்புவது முறையெனவே பொருத்தமுற்றெழுந்திருந் தேயோடிப்போய்ப் பொடுபொடெனவிறகு நடுவொளித்தேன் 120. துணிவுடனிருக்கையி லேசாய்ந்திடுந் தோட்கட்டிலொருகருந் தேட்கொட்டின அணிகெட்டுத்தடுமா றித்தேள்விடம் ஆற்றாமல்மதியையுந் தோற்றேனே 121. எரித்திடுங்கடுப்பத னாற்படபடென் றீரல்துடித்திடக்கண் ணீர்சொரிந்தேன் ஒருத்தனா மலைத்திருந் தேன்பார்ப்பாத்தி உப்புக்கண்டம் போக்கடித்த வொப்புப் போல 122. மறுமொழி பேசா மற் கச்சைக்குள்ளே மருந்திருந்ததையெடுத் தருந்தாமல் குறு குறென்றே விழித் தேன் கள்ளனைத்தேள் கொட்டின தென்பதென் மட்டுமாச்சே |