பக்கம் எண் :

நொண்டி சிறைபடல்27


    129. மூக்கைச் சுழித்துக்கொள் வார்முகமாறி
            மூச்செறிந்திவனுக்கு வாச்சுதென்பார்
         காக்கைகழுகும் பொருந் தாநாற்றத்தைக்
            கண்டுமிவன் பொருந்திக் கொண்டானென்பார்

     130. தொடக்கென்றும் பாரா மலடியேன்
            தொலைக் குழிக்கழுதைபோற் சலக்கத்திலே
         கிடக்கிற சமயத்தி லேமயிர் தொட்டுக்
            கேக்கையிட்டொருபயல் தூக்கினானே

     131. முட்டுக்கண்டவர்போ லத்தீண்டாமல்
            முழுகச் சொன்னாருடற் கழுவிக்கொண்டேன்
         கட்டித்தானென்னைக் கொடுபோய் நான் செய்த
            காரியஞ்சொல்லித்தலை யாரிமுன்னே

     132. விட்டிவன் பதனமென் றாரவனொரு
            வீட்டிற்குள்ளேயடைத்துப் போட்டுவைத்தான்
         கட்டினிற்கிடந்து ருண்டேன் விடிந்திடுங்
            காலைக்குள் வந்துசிறைச் சாலைக்குள்ளே

     133. பெரியார்பெருந்தலை யாரில்லாமற்
            பேயுநாயுமாவென்னைப் பிடித்திழுத்துத்
         தரியாதெனைநடத் திக்கொடுபோய்த்
            தாவூதுகான்முன்ன மேவிடுத்தார்

     134. பட்டாணிராவுத்தமார் துரைமக்கள்
            பாளையக்காரர்க ளனைவோரும்
        அட்டாள தேசத்திலுண்டோ கள்ளனிவன்
           அடக்கமு மொடுக்கமும் பாருமென்பார்