பக்கம் எண் :

நொண்டி தண்டனைக்குள்ளாதல்29


    141. சுந்தர மகராசன் சுலூபுகான்
           சுமுகன் கொலுவருகின் சமுகத்திலே
        சந்தடிதனைவிலக்கி யெனையங்கு
           தடுக்காமற் கொண்டுபோய் விடுத்தாரே

     142. கொண்டுபோய் முன்னில்விட் டுநான்செய்த
            கோலத்தையுந் திருட்டுச் சாலத்தையும்
         பண்டுபார்த் ததைபோ லப்படிப் படி
            படித்தாரவர் பார்த்து நொடித்தாரே

     143. கோன் ரேஜாத்து * வென் றார்சாகிபு நீர்
            கோபஞ்செய்யா தையுநான் காபரெ *ன்றேன்
         ஏன்தானோ சிரித்துக் கொண் டாரிருந்தவ
            ரெவ்வெவரு மெனைப்பார்த்துச் சவ்வாசெ *ன்றார்

     144. சிரித்துத் தலையசைக்க வேநான்மனதின்
            சீவனுக் கழிவில்லை யெனநினைந்து
         தரித்துத்திடமா நின் றேன் காலிமார்*
            தனையழைத்திவனுக்கென் குக்குமெ *ன்றார்

     145. காதி *மாரனை வோரும் புறுக்கானில்*
            கக்கான முறைமை கடக்காமலே
         கோதிலா தறிவுணர்ந்தே யிவன்றனைக்
            குறிப்புடன் காலுங் கையுந் தறித்திடென்றார்*

     146. சொலுமொழி தனைக்கேட் டேசுலூபுகான்
            துரைதம் முத்திரைமோ திரந்தனையே
         தலையாரிகையிற்கொடுத் தேயிவன்றனைச்
            சாகாமற் காலுங்கையுந் தறித்திடென்றார்