பக்கம் எண் :

மாமுநயினார் நொண்டியைக் காணுதல்31


    153. அழுது புலம்பிப் புலம்பி விதிப்படி
            யாச்சுதென் றேபெரு மூச்செறிந்து
         பொழுது புகுமளவும் வேதனையாய்ப்
            புரண்டு புழுதிமண்ணி லுருண்டுருண்டு

     154. விதியால் மதிமயங்கிக் கிடக்கின்ற
            வேளை தனிலேயந்தப் பாளையத்திற்
         பதியா யிருக்கின்ற பேரெனை வந்து
            பார்ப்பாரு மேதென்று கேட்பாரும்

     155. ஈனக் கள்ளனிவன் காலுங்கையும்
            இழந்தா னிதுதிரு வுளந்தானென்
         றதிசயம் பார்க்கவந்தே சுற்றிச்சுற்றி
            யலைவாரை யெண்ணவுந் தான் றொலையாதே

     156. அந்தநல்ல சமயத்தி லேவகுதையில்வாழ்
            அப்துல் காதிறுப்பிள்ளை புத்ரனானோன்
         மந்தர திண்புயத் தான் கனகதுரை
            மாமு நயினார்ப்பிள்ளை* மகிபாலன்

     157. வெம்பிய மதகரி யான் காயலில்
            விசயரகுநாதப் பெரியதம்பி
         தம்பித் துணையென வாழ் குங்குமத்
            தாமமிலங்கும்புய மாமுநயினான்

     158. சென்னப் பட்டண மிருந்து செஞ்சியிற்
            செருக்குடனேவந் திருக்கையிலே
         அந்நகர் தனிலடி யேன் களவுசெய்
            தாக்கினைப் பட்டவெனைப் பார்க்கவந்தார்