பக்கம் எண் :

நொண்டி இராமநாதபுரம் போதல்33


    165. காயமு நாளுக்கு நாளுலர்ந்திடக்
           கருந்தழும் பேறவே மருந்துங் கட்டி
        தாயெனவுபசரித்து நோய்தீர்த்துத்
           தற்காத்து ரட்சித்தார் மிக்காக வே

     166. நடுத்தலம் புகழ்மத வேள் மாமு
           நயினான் மகிபதி கையினாலே
        கொடுத்திடும் பணத்தாலே நானொரு
           குதிரையும் வாங்கிக்கொண்டேன் சதிருட னே*

     167. ஆளொன்று கூட்டிக் கொண்டேன் செஞ்சியில்வந்
            தலைந்தபாவ மெல்லாந் தொலைந்த தென்றே
         நாளொன்று கேட்டுக் கொண்டேன் சீக்கிரத்தில்
            நடந்தேன் தொலைவழி கடந்தே னே

     168. வாலிகொண்ட புரங்கடந்தே யரியலூர்
            வழியும் புதுக்கோட்டை வெளியும் விட்டுச்
         சோலியொன்றுஞ் செய்யாமற் றிருமெயத்
            தூருங்கடந்து தொண்டி யூரில் வந்தேன்

     169. கோதற்ற தொண்டி கடந்து நல்ல மணற்
            குடியுந்திருப்பாலைக் குடியும் விட்டுப்
         பாதைக்குள் வாடியும் விட்டுத் தேவி
            பட்டணமும் வந்து கண்டே னிட்டமுடனே

     170. திருந்தலர் பணிபா தன்னரபதி
            செகபதி சேதுபதி ரகுநாதன்
         பொருந்தமனு முறை செய்யும் ராமனாத
            புரத்தில் வந்தன்றிரவு தரித்தே னே