பக்கம் எண் :

கீழக்கரையில் செய்தக்காதி கொலு வீற்றிருத்தல்35


    177. நிறைந்திடு மாசாரத் தில் நானுமந்த
           நெருக்கத்தி லொருபுற மிருக்கச் செய்தே
        சிறந்திடு சமயத்தி லேரட்சித்த
           சீமான் அப்துல் காதிர் மாமுநயினான்

     178. வரக்கண்டெழுந்திருந் தே கும்பிட்டு
            மார்க்கண்டன் போல்விரென்று வாழ்த்திக்கொண்டே
         இரக்கஞ் செய்தெனை நோக்கி யேன்பிள்ளாய்
             எப்போவந்தா யென்றா ரிப்போதென் றேன்

     179. செங்கை முகில் மாமு நயினான் நல்லதென்று
            சேகுக் கன்று Oமன்னவன்முன் பாகச் சென்று
         தங்களிலிரு பேரு மென்கருமந்
            தனைப்பேசி மரக்காயர் சமுகத்தி லே

    180. சேகுக்கன்று மகிபாலன் என் செய்தி
           செய்தக் காதி தன்றிருக் காதிலுரைத்தான்
       ஆகட்டென்று முடிதுளக்கி யவனையிங்
           கழையு மென்றாட்களை யனுப்பின னே

      
 கீழக்கரையில் செய்தக்காதி கொலு வீற்றிருத்தல்

    181. ஆனவர்கள் வந்துசொல வே நமக்கினி
           யட்ட யோகங்கிட்டுமினித் திட்டமென வே
        கானுலாவிய கொடை யான் செய்தக்காதி
           கதிர்ப்ரபை தங்குந்தங்கச் சவுக்கையின் மேல்

   182. பிறைநுதலார்மத வேள் மீராப
         பிள்ளைமரக்காயன்Oவள்ள லுடன்
      திறமுடனடுத்திருந்தே பலபல
         செய்திகள் யோசனை செய்திட வே