189. கரணிகர் நிறைந்து நின்றே அருட்கடைக் கண்பார்த்து வாய்புதைத்துக் காரியஞ்சொல்லச் சரணிற் சலாமு*ரைத்தே தீவாந்தச் சத்திரரும் வர்த்தகரு முத்திரஞ்சொல் ல 190. சங்கநிதி பத்மநிதிபோல் நிதிவாரிச் சடையாமலிருகையுங் கொடைகொடுக்க இங்கித சௌந்தரிய மின்னார் ஆலாத்தி யேந்தி யிருபுறமுஞ் சேர்ந்து நிற் க 191. எச்சரிக்கை சாமியென் றே பக்கத்தில் இராசியக்காரர் நின்று வாசகஞ் சொல்லக் குச்சலியர் வச்ரமணி யும் நகைகளுங் கொண்டுகளி கூர்ந்து நல் தெண்டமிட வும் 192. தருப்போற்கொடை கொடுக்கும் வட்டாவுந் தாம்பூல முந்துகிலுந் தாங்கி நிற்க விருப்பொடு முத்து ரத்தி னப் பரீட்சையர் மேன்மையொடுதானிருக்க வான்சபை யில் 193. நிறைந்த கலைமதி வந்தே சமுகத்தில் நின்றதென்ன வெள்ளை வட்டமொன்று நிழற்றச் சிறந்த சிங்காசனத் தில் செய்தக்காதி சிலைமதனைப் போலக் கொலுவிருந்தான் 194. இருந்த சமுகத்திற் சென்றேன் உடல்பூரித் திளகி மனநன்றாய்த் தளதளத்துக் கருந் தடங்கண்ணியர்வேள் செய்தக் காதி கன்னாவ தாரனைப் போலிருந்தான் |