201. கண்டு தொழு திறைஞ்சி நின் றேன் இசுலா மாக்கு மெனையென்றொரு வாக்குச் சொன்னேன் சடுதியில் சதக்கத்துல் லா கலிமாத் தானுஞ் சொன்னாரதை நானுஞ் சொன் னேன் 202. அடைவொடு கலிமா வின் பொருள்கள் அனைத்தையுஞ் சொன்னாரென்றன் மனத்திருத்தி ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... 203. படித்துப் *பறலு சுன்னத்து* நவிலுடன்* *பாத்திகாவோதிசல வாத்த *றிந்து முடித்துக் கலா* தொழு தே னிவனல்ல முசிலிமெனச் சொன்னா ரிசுலாமானோர் 204. தொழுகையு நோன்பையு மே* சக்காத்தையு*ந் தொகுத்தபடி முடித்து நடத்திடென் றார் பழுதறு கஜ்ஜு செயவே போவென்றார் பக்கத்திலிருந்தோர்கள் மக்கமதற்கு 205. சொற்படி செலமன மாய்ச் சதக்கத் துல்லாவுடன் சலாமுஞ் சொல்லிக்கொண்டேன் சற்குணநிதியனை யான் செய்தக்காதி தாமரைத் தாளுக்குஞ் சலாஞ் செய்தேன் 206. கன்னாவ தாரனையா செய்தக்காதி காரியக் காரர்கள் வீரிய மாய்ப் பொன்னாருஞ் சரக்கேற் றித் தொழிற்செயப் போரபத்தாசினி லேறிக் கொண்டேன் |