207. அணிபெறு பத்தாசி லே துணைவரும் ஆட்களுடன் பொன்போல் வாழ்க்கையிற்சென்றேன் திணிசுற்றி விளங்கிடுஞ் சீர் கோழிக்கூட்டி*ற் செப்பமுடன் சென்றுமறு கப்பலேறி 208. கடற்கரை வழிகடந் தே யிறங்கிமக் காவுங்ககுபத்துல் லாவுங்* கண்டேன் இடத்தினி லெப்பைமாரு* மெவருக்குமு றீதுகள்* கொடுக்குஞ் சறீபுகளும்* 209. அறபிகள் செய்யிது*க ளுமூமின்* க ளாலிங்க ளோடு* பள்ளி மோதின் களுந்* திறமுட னிருக்கக் கண் டேன் அந்தந்தத் தேசந்தனி லேயுள்ள ராசர்களும் 210. மக்கமுங்* ககுபா* வுங் கண்டந்த வரிசைத்தலங்கள்கண் டதிசயித்தேன் மிக்கபுறுக்கான்* படி யே யடியேன் மேலோனைத் தொழுதொரு பாலிருந்தேன் 211. அத்தலந் தனிலிருந் தே வரிசையா யருந்தவம் புரிந்தங்கே யிருந்ததற் பின் மைதவழ் முகிற்குடை யார் அரசு செய் மதினா தனக்கிரு பது நா ளில் 212. போனேன் மதினா விற் போயவ்வூர்ப் புரிசையெல்லாங் கண்டேன் வரிசையுடன் தானேமகிழ்ந்து நபி திருவடி சாய்த்த தலத்தைத் தொட்டுச் சேர்ந்தே னே |