13. தேச மெழுகடலுஞ் செல்வேன் என்றுந் திண்டுமுண்டு கொண்ட நொண்டிகளைக் கொல்வேன் பாச மறுசமயம் வெல்வேன் செல்வப் பார்த்திபன் செய்தக்காதி கீர்த்தியைச் சொல்வேன் 14. கன்னன் செய்தக்காதி புகழ்துதிப்பேன் அவன் காலைக் கும்பிடாரை நொண்டிக் காலினா லுதைப்பேன் என்னைவணங் கினபேரைத் துதிப்பேன் விரு திட்டுச்சண்டை யிடுவார்மு னெட்டிக் குதிப்பேன். தனனா தனதனனா-தான-தானனதானனதத்தனனா நொண்டியின் வரலாறு அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரியவிருத்தம் உரைப்பருந் தமிழ்ப்பா வாணர் உரையையுங் காத்து நீண்ட திருப்பெரும் புவனங் காத்துத் தீனவர் குலமுங் காத்த வரைப்பெரும் புயத்தன் காயல் மன்னவன் செய்தக் காதி துரைப்பெருஞ் செல்வம் பாடித் துதித்திடு நொண்டி நானே. தரு-இராகம்- நாதநாமக்கிரியை - தாளம்-ஆதி 15. மாலைக்கறுப்பழ கர்சொக்கர்O மச்சினனாகிய அச்சுதவேள் சோலைக்கிரி தனி லேகள்ளத் துங்கனெனுஞ்சேமன் வங்கிசத்தில்O 16. இல்வாழ்க்கைகொண்டபி ரான்கள்ளர்க் கெல்லாந்தலைமைசெய் வல்லாளன் கல்லாவிற்பால்கறப் போன்வணங் காப்புலிசேயொடுங் காப்புலிநான் |