பக்கம் எண் :

10 குசேலோபாக்கியானம்

பாம்பு எனினும் பொருந்தும். காளிங்கன் என்ற பெயர்பெற்ற பாம்பு கருடனுக்குப்
பயந்து சௌபரி முனிவரால் கருடன் வராதிருக்கும் வரம்பெற்ற யமுனை மடுவிலிருந்து
பலர்க்கும் அச்சத்தை விளைத்தது. கண்ணன் மாடு மேய்க்குங் காலத்தில் அம் மடுவி
லிறங்க விளையாடியபோது சீறிப் படமெடுத்துவர அப் பாம்பின் மேலேறி நடித்து
விளையாடினன் என்பது கதை. அதனால் சிரத்தினில்...ஆடினோன் என்றார். பூ, அகிற்புகை,
இவ்விரண்டும் போர்த்த குழல் என்க. பூவாலும் அகிற் புகையாலும் போர்க்கப்பட்ட
குழல். போர்த்தல் - மூடுதல். மலரும் அகிற்புகையும் நிறைந்த குழல் என்று கொள்க.
மாவகிர் - மாம் பிஞ்சின் பிளவு - இது கண்ணுக்கு உவமை. மா அதன் பிஞ்சுக்
காயிற்று. ஆகுபெயர். வேய்வாட்டும் தோட்டுணை யென்றது மூங்கிலும் கண்டு
தோளைப்போல மென்மையும் பசுமையும் பெற்றிலேம் என்று வருந்துதற்கு ஏதுவாகிய
தோளிணையெனக் கொள்க. வேயை வாட்டும் என உருபு விரிக்க. (9)

               எழு சீரடி ஆசிரிய விருத்தம்
     ஏழிரண் டென்னும் புவனங்காத் தளி்ப்போன்
          எழில்வசு தேவன்றன் மைந்தன்
     வீழியங் கனிவாய்க் கொடியழன் மகட்கு
          மென்றுகில் அளி்த்தபைங் கொண்டல்
     தாழிருங் கூந்தற் பூதனை யுயிரைச்
          சவட்டினோன் தவாநலம் உண்டோன்
     பாழியம் புயத்துச் சேதிபற் றுணித்த
          பண்ணவன் மலரடி பணிவாம்.

   (சொ-ள்,) ஏழ்இரண்டு என்னும் புவனம் காத்து அளிப்போன் - பதினான்கு
என்னும் எண்ணளவைக்கொண்ட புவனங்களைக் காத்தருள் செய்பவன்; எழில் வசுதேவன்
தன் மகன் - வசுதேவனுக்கு அழகுமிக்க புதல்வன்; வீழி அம் கனிவாய் கொடி அழல்
மகட்கு மெல்துகில் அளித்த பைகொண்டல் - அழகிய வீழிக்கனிபோலும் சிவந்த
(இதழ்களை உடைய) வாயினை உடைய தீயிற்பிறந்த கொடி போல்வாளாகிய திரௌபதிக்கு
மெல்லிய துகிலை (ஏற்ற காலத்தில்) அளித்தருளிய பசுமையான மேக நிறத்தோனாகிய
திருமால்; தாழ்இரு கூந்தல் பூதனை உயிரைச் சவட்டினோன் தவாநலம் உண்டோன் -
நீண்ட கரிய கூந்தலையுடைய பூதனை என்னும் பேய்மகளின் உயிரை அழித்து, அவளின்
கெடுதலில்லாத வலியையுந் தொலைத்தவன்; பாழிஅம் புயந்து சேதிபன் துணித்த
பண்ணவன் - பருத்த அழகிய புயங்களை