(வி
- ம்.) அழகிற் சிறந்தவர் அரம்பையர்: அவ்வரம்பையரினும் எழில்நலமுடையவர்
ஆய்ச்சியர் என்பது தோன்ற "விண்ணோர் மடந்தையர் சமழ்ப்ப" என்றார். சமழ்ப்ப -
நாணம் அடைய. அரம்பையர் கண்டு நாணுவதற்கு ஏதுவாயமைந்திருப்பன இளநலமும்
எழிலுமே என்பார் "இலங்குறு மிளநல மெழிலார்" என்றார். அமை-மூங்கில். இது
தோளுக்கு உவமை. மென்மையும் வழுவழுப்பும் பொதுத் தன்மையாம். கண்ணன்
பேரழகு ஆய்ச்சியர் கண்ணைக் கவரும்: அவன் அகன்ற மார்பைக் காண்பதற்கு அம்
மகளிர் விரும்புவர். பதினாறாயிரம் கோபியர் அவன் வரவு பார்த்திருப்பர்.
அவர்கட்கெல்லாம் காதலனாக அங்கங்கே சென்று விளையாடினான். அவனைக் காண
விரும்பாத எவரும் இலர் என்ற கருத்தடங்க "ஆய்ச்சியர் விழியா மம்புயத் தேமலர்
மலரச் சமைத்த பூண்மார்பன்" என்றார். ஆய்ச்சியர் கண்களாகிய தாமரை மலரை
மலர்த்துகின்ற சூரியன் இக் கண்ணனே என்றாராயிற்று. மல் - மல்லர், மற்போர் செய்பவர்.
இஃது ஆகுபெயர். கஞ்சனால் ஏவப்பட்ட பல மல்லர்களை இக் கண்ணன் கொன்று
தொலைத்தான் என்பது பாகவத வரலாறு. அன்றியும் பாண்டவர்க்குத் தூது சென்றபோது
துரியோதனன் வகுத்திருந்த பொய்யரியணைமேல் ஏறியபோது உள்ளிருந்த மல்லர்களை
உதைத்துச் சிதைத்து வதைத்தான் என்று பாரதமும் கூறும். அதனால் "வன்மல்லைக்
குமைத்தருள் கண்ணன்" என்றார். வாழிய எனவே, கண்ணன் கதை உலகில் நிலவுக
என்றாராயிற்று. (8)
கலிவிருத்தம்
தாவகிச் சிரத்தினிற் சரண்வைத் தாடினோன்
பூவகிற் கரும்புகை போர்த்த பொற்குழன்
மாவகிர்க் கருங்கண் வேய் வாட்டுந் தோட்டுணைத்
தேவகி தனயனைச் சிந்தை செய்குவாம்.
(சொ-ள்.) தா அகி சிரத்தினில் சரண்வைத்து ஆடினோன்-தாவுகின்ற
பாம்பின்
தலைமேல் திருவடிகளை வைத்து நடித்தவனும்; பூ அகில் கரும்புகை போர்த்த பொற்குழல்
- மலரணிந்த அகிலின் கரும்புகை (ஊட்டுதலால்) மூடப்பெற்ற அழகிய கூந்தலையும்;
வேய்வாட்டு தோள்துணை தேவகி தனயனை - மூங்கிலை வருத்தும் இரு
தோள்களையுடையளாகிய தேவகி தேவியி்ன் புதல்வனுமாகிய கண்ணபிரானை; சி்ந்தை
செய்குவாம் - யாம் நினைத்து துதிப்போமாக.
(வி - ம்) தா+அகி=தாவகி. தாவும் பாம்பு, ஆடும் பாம்பு என்ற பொருளைத்
தந்தது, தா - வலி, வலிமையுடைய
|
|
|
|