பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்11


உடைய சேதிநாட்டு வேந்தனான சிசுபாலனைக் கொன்றவன் (ஆகிய கண்ணபிரானது);
மலர் அடி பணிவாம் - திருவடித் தாமரை மலர்களை யாம் வணங்குவோம்.

   (வி - ம்) மேல் ஏழ் புவனம் கீழ் ஏழ் புவனம் இருப்பன என்றார், என நூல்கள்
கூறுவதால் "ஏழிரெண் டென்னும் புவனம்" காத்தளிப்போன் என்றது ஒரு
சொன்னீர்மையாய்க் காப்பவன் எனப் பொருள்தந்தது. வாசுதேவன் என்பது செய்யுள்
நோக்கிக் குறைந்து வசுதேவன் என நின்றது. குறுக்கல் விகாரம். அழல்மகள் - பாஞ்சாலி,
திரௌபதி, இவள் பாஞ்சால மன்னனியற்றிய வேள்வித்தீயிற் பிறந்தவள் ஆதலின்
அழல்மகள் எனப்பட்டாள், அழல் - நெருப்பு, திரௌபதியைத் துச்சாதனன்
துகிலுரிந்தபோது கண்ணனையெண்ணி மானங் காக்குமாறு வேண்டினள். வேண்டியவாறே
துகில் உரிய உரிய இடையில் வளர்வது போல நீங்காது இருந்தது. அது குறித்து
"துகிலளித்த" என்றார். கஞ்சனால் ஏவப்பட்ட பூதனையென்னும் பேய் தாய்போல
வுருவெடுத்துவந்து பால்கொடுக்க பாலுட னுயிரையும் பருகினான் என்ற வரலாறு குறித்துப்
"பூதனை உயிரைச் சவட்டினோன்" என்றார். தவாநலம் உண்டு உயிரைச் சவட்டினோன்
என மாற்றுக. தாவம்+அநலம்=தாவாநலம்=காட்டுத்தீ. இச் சொற்றொடர் குறுகித்
தவாநலம் என்று நின்ற தெனக்கொண்டு காட்டுத்தீயைக் கெடுத்தவன் எனப்
பொருள் கொள்ளினும் பொருந்தும். பசுக்கள் மேய்த்த காலத்தில் காட்டுத்
தீயையழித்து ஆயரைக் காப்பாற்றிய வரலாறும் இருப்பதால். கண்ணனை
யிகழ்ந்து போருக்கழைத்துச் சிசுபாலன் கண்ணனாற் கொல்லப்பட்டான் என்பது
பாரதக் கதை.                                                  (10)

               கலிவிருத்தம்
     மாதவர் பன்னியர் மனமென் தாமரைப்
     போதகத் தனமெனப் பொலிந்த மாண்பினான்
     ஆதவர் கோடியர் அழுங்கு காந்தியான்
     பாததா மரைமலர் பணிந்து போற்றுவாம்.

   (சொ - ள.்) மாதவர், பன்னியர் மனம் என் தாமரை போது அகத்து அ(ன்)னம்
என பொலிந்த மாண்பினான் - பெரிய தவஒழுக்கத்தினரான முனிவர்களின் தேவி
மார்களது மனமாகிய மெல்லிய தாமலை மலர்களின் விளங்கும் அன்னப்
புள்ளினைப் போலத் திகழும் மாட்சிமை உடையோனும்; ஆதவர் கோடியர்
அழுங்கு காந்தியான் - கோடி சூரியர்கள் வருந்துதற்கேதுவாகிய திருமேனி
ஒளியினை உடையோனும்; ஆகிய கண்ணபிரானுடைய