பாத தாமரை
மலர் பணிந்து போற்றுவாம் - திருவடிகளாகிய தாமரை மலர்களை
யாம் வணங்கித் துதிப்பாம்.
(வி - ம்) பன்னியர் - மனைவியர். அன்னப் பறவை தாமரைப்
பூவிலமர்ந்திருக்கும் இயல்புடையது என நூல்கள் கூறுவதால் அதற்கியைய
மனமாகிய தாமரைப் பூவில் அன்னம் போல அமர்ந்திருப்பவன் என்றார். கோடி
சூரியர் ஒளியையும் மழுங்கும்படி செய்யும் திருமாலின் திருமேனியின் ஒளி எனக்
கொள்க. இறைவன் ஒளிமயமானவன் ஆதலால் அவன் திருமேனி ஒளி முன்
எவ்வொளியும் இலங்காது என்று கூறுவதுதான் பொருத்தம். மனமாகிய தாமரை
உருவகவணி. (11)
அறுசீரடி
ஆசிரிய விருத்தம்
ஆர்ந்ததழல் இறைக்குமதிற் புரத்தரசு
கரக்கொடிகட்
கரிவா ளாகிக்
கூர்ந்தமதி யிலாக்கஞ்சன் தூசுகொடு
வருமீரங் கொல்லி
வாழ்நாள்
தீர்ந்திடச்செய் விதியாகிக் கற்றாக்கட்
குரிஞ்சுசெறி தறியு
மாகி
வார்ந்தகுழ லாய்ச்சியர்க்கோர் வேளாகி
நின்றானை வழுத்தல்
செய்வாம்.
(சொ - ள்.) ஆர்ந்த தழல் இறைக்கும் மதில் புரத்து அரசு கரம்
கொடிகட்கு
அரிவாள் ஆகி - நிறைந்த நெருப்பை வீசுகின்ற மதில் சூழ்ந்த நகரத்திற்கு
அரசனாகிய வாணா சூரனுடைய கைகளாகிய கொடிகளை அறுக்கும் அரிவாள்
ஆகியும்; கூர்ந்த மதி இலா கஞ்சன் தூசுகொடுவரும் ஈரம் கொல்லி - நுட்பமாகிய
அறிவில்லாத கஞ்சனின் ஆடைகளைக் கொண்டுவரும் வண்ணானுடைய, வாழ்நாள்
தீர்ந்திட செய் விதியாகி,-வாழ்நாட்களை நீங்க ஒழித்த ஊழாகியும்; கன்று ஆக்கட்கு
உரிஞ்சு செறிதறியும் ஆகி - கன்றினை ஈன்ற பசு நிரைகட்கு உடலுரிஞ்சுதற்கமைந்த
தறியாகியும்; வார்ந்த குழல் ஆய்ச்சியர்க்கு ஓர் வேள் ஆகி நின்றானை வழுத்தல்
செய்வாம் - நீண்ட கூந்தலை யுடைய இடைச்சியர்க்கு ஒப்பற்ற காமனைப்போல
நின்றவனும் ஆகிய கண்ணபிரானை யாம் துதித்தல் செய்வாம்.
(வி - ம்) ஆர்ந்த தழலிறைக்கு மதிற்புரத்தரசு என்பது வாணாசுரனைக்
குறித்தது. அவன் கோட்டை மதில் நெருப்பினை யள்ளி யிறைக்கும்படி
கட்டியிருப்பது. நெருப்பே அவனுக்குக் கோட்டையாக நின்றது என்றார். அவன்
கைகளாயிரமும,்
|
|
|
|