மனத்தை
மலையாகவும், தமிழை மழையாகவும் அறிவைப் பொய்கையாகவும்
ஆசிரியரை மேகமாகவும் உருவகஞ் செய்தது காண்க.
(13)
எழுசீரடி
ஆசிரிய விருத்தம்
சிவபரஞ் சுடரின் இணையடி மலரைத்
திரிகர ணத்தினும்
வழாது
பவமறத் தினமும் வழிபடு குணாளன்
பகர்திரி சிரபுரத்
தலைவன்
சிவமுறு தென்சொல் ஐந்திலக் கணத்தில்
தெளிவுறச் சிறியனேற்
கருளும்
நவமுறு புகழ்மீ னாட்சிசுந் தரவேள்
நாண்மல ரடிமுடி
புனைவாம்.
(சொ - ள்.) சிவ பரஞ்சுடரின் இணை அடி மலரை திரி கரணத்தினும்
வழாது
பவம் அற தினமும் வழிபடு குணாளன் - சிவபிரானாகிய முழு முதற்
பரஞ்சோதியின் இரண்டாகிய திருவடி மலர்களை (மனம் மொழி மெய்) ஆகிய
மூன்று கரணங் களாலும் தவறாமல் பிறவி அறும்படி நாள்தோறும் வழி பாடாற்றும்
குணமுடையோன்; பகர் திரிசிரபுரம் தலைவன் - (யாவராலும்) புகழ்ந்து கூறும்
சிறப்பினை உடைய திரிசிரபுரத்தில் வாழும் முதல்வன்; சிவம் உறு தென் சொல்
ஐந்து இலக்கணத்தில் - மங்கலமாகிய தென் (தமிழ்) மொழியின் (எழுத்து, சொல்,
பொருள், யாப்பு, அணி ஆகிய) ஐந்து கூறுகளாலமைந்த இலக்கணத்தில் ;
தெளிவுஉற சிறியனேற்கு அருளும் - தெளிந்த அறிவுண்டாகும்படி சிறியேனாகிய
எனக்கு அருளிக் கற்பித்த; நவம் உறு புகழ் மீனாட்சி சுந்தரவேள் நாள் மலர் அடி
முடி புனைவாம் - புதுமையான புகழையுடைய மீனாட்சி சுந்தரம் என்னும்
விரும்பத்தக்க நல்லாசிரியனது புதிய தாமரை மலர்போலுந் திருவடிகளை நம்
தலைமீது அணிந்து கொள்வாம்.
(வி - ம்) இதுவும் ஆசிரியர் வணக்கங் கூறுகின்றது. திரி கரணம்
- மூன்று
கருவிகள். அவை: மனம், வாக்கு, மெய் என்பன. இவை மூன்றும் ஒரு
வழிப்பட்டபோது அஃது உண்மைச் செயலாகும். இலக்கணத்தில் தெளிந்த
அறிவுடையவனாகச் செய்தல் அரிய செயல், ஆதலின் அத்தகைய அரிய
செயலைப் புரிந்ததற்குக் கைம்மாறாக நான் செய்யும் நன்றி திருவடிகளை வணங்கு
தலேயன்றி வேறில்லை என்பார், 'நாள் மலரடி முடி புனைவாம்'
|
|
|
|