பக்கம் எண் :

156 குசேலோபாக்கியானம்

   (சொ - ள்.) நண் அரு இக் கொடும்பருவம் நகை தரு வெள் ஒளி காட்டி -
அடைதற்கரிய இந்தக் கொடிய வேனிற் காலமானது விளக்கத்தைக் தருகிற வெள்ளிய
ஒளியினை விரித்து, எண்ணு மனம் கரைந்து உருக இந்தியமும் உடன் உருக
- நினைக்கின்ற மனமும் நெகிழ்ந்து துருகவும் ஐம்பொறிகளும் அதனுடன்
உருகவும், துண் எனும் வெந்தீ வெப்பம் தொகு மைந்தர்க்கு உறுத்து தலால்
- நடுங்குகின்ற கொடிய தீயி்ன் வெம்மை போன்ற வெப்பத்தைக் கூடிய
ஆடவர்க்கு உண்டாக்குவதால், வண்ணம் மணி நகை துவர் வாய் மட நலார்
தமை பொருவும் - அழகிய முத்துப் போன்ற பல்லினையும் பவளம் போன்ற
வாயினையும் உடைய மங்கையரை ஒத்தது.

   (வி - ம்.) வேனிற் காலமானது ஆடவரை வருத்தும் மங்கையரை ஒத்திருந்தது.
வேனில் ஒளி பொருந்திய வெள்ளை வெயில் ஒளியைக் காட்டியது, மங்கையர் பல்லைக்
காட்டிச் சிரிப்பது போலவும் வெயிலின் சிறப்பு, அம் மங்கையர் பவளம் போன்ற வாய்
போலவும் இருந்தது. வாய் திறந்து நகை காட்டி மங்கையர் ஆடவரை வருத்துவது
போல மாந்தரனைவரையும் வேனில் வருத்தியது எனக் கொள்க. கண்டார்க்கு மனமும்
ஐம்பொறிகளும் வெதும்புவதுபோல வேனில் வெப்பங் கொண்டார்க்கு மனமும்
ஐம்பொறிகளும் வெதும்பின என்று கொள்க. மணி - முத்து. துவர் - பவளம்.
                                                           (186)

     வாங்குகடல் அகம்புகுந்து
          வடவைவதி வதையறிந்தோம்
     ஓங்குகடல் சுவற்றவென
          உலகுரைத்தல் அதுபொய்யே
     தேங்கியஇப் பருவத்தாற்
          செறிவெப்பிற் காற்றாமை
     ஆங்குகுளிர் இடந்தேடி
          அஞ்சியொளித் ததுபோலும்.

   (சொ - ள்.) வடவை ஓங்கு நடல் சுவற்ற வாங்கு கடல் அகம் புகுந்து வதிவதை
அறிந்தாம் என உலகு உரைத்தல் அது பொய்யே - வடவைத் தீயானது உயர்ந்த
கடலை வற்றச் செய்யும் பொருட்டு வளைந்த கடலினடுவட் புகுந்து தங்குவதை
அறிந்தோமென்று உலகத்தார் சொல்லுதலாகிய அம் மொழி பொய்ம்மொழியே
யாகும் ; தேங்கிய இப் பருவத்தால் செறி வெப்பிற்கு ஆற்றாமை ஆங்கு குளிர் இடம்
தேடி அஞ்சி ஒளித்தது போலும்-(அவ் வடவைத் தீயானது) வேனிற் பருவத்தால்
மிகுந்த