வெம்மைக்கு ஆற்றாது குளிர்ந்த விடமாக
அவ்விடத்தைத் தேடி அச்சமுற்று ஒளித்தது
போலும்.
(வி - ம்.) இவ் வேனிற் காலத்தின் வெம்மைக்கு அஞ்சியே அவ்வடவைத்
தீக்
கடலுட் புகுந்தது போலும். கடனீரை வற்று விக்க நிற்கின்றது என்று கூறுவது பொய்
என்று வெப்பத்தின் கொடுமையைக் கற்பித்தார். இது தற்குறிப்பேற்ற வணி. வாங்கு
கடல் : வினைத்தொகை. வடவை - பெண் குதிரை முகம் போலத் தோன்றும் ஒரு
பெருநெருப்பு. இது கடலுள் நிற்கிறது என்று கூறுவது இலக்கிய மரபு. ஊழித் தீ
என்பதும் இது.
(187)
இத்தகைய வேனிலிடை
இரும்பசியால்
அறமெலிந்தும்
பைத்ததரு நிழலிருந்தும்
பள்ளமெலாம்
ஆராய்ந்துந்
தத்துபுனல் கிடையாமைத்
தாகத்தால்
வாய்புலர்ந்துஞ்
சுத்திவிர தத்தவநற்
றுறைநின்றோன்
சொல்லுமால்.
(சொ - ள்.) இத்ததைய வேனில் இடை இரு பசியால் அற மெலிந்தும்
பைத்ததரு
நிழல் இருந்தும் பள்ளம் எலாம் ஆராய்ந்தும் - இத் தன்மையையுடைய வேனிற்
பருவத்தில் மிகுந்த பசியினான் மிகவு மிளைத்தும் பசுமையாகிய மர நிழலில் தங்கியும்,
தத்து புனல் கிடையாமை தாகத்தால் வாய்புலர்ந்தும் - அலை வீசும் நீர்
கிடையாமல் தாக மிகுந்து வாய்புலர்ந்தும், சுத்தம் விரதம் தவம் நல் துறை
நின்றோன் சொல்லும் - தூய விரதமும் தவமும் ஆகிய நல்வழியில் நின்றவனாய
குசேலன் தனக்குட் சொல்லுகிறான்.
(வி - ம்.) இருமை + பசி = இரும்பசி - மிகுந்த பசி, பெரும்
பசி. பைத்த
தரு - பசிய மரம். தத்து புனல் - தாவும் நீர் ; தத்துதல் - தாவுதல். அலை
மோதுதலை யுணர்த்தியது.
(188)
சுடர்மறைய ஊரகத்துத்
துயில்வதற்கார் இடங்கொடுப்பார்
படர்வழிச்செல் நமக்கிவ்வூர்ப்
பழக்கமுடை யாரிலரென்(று)
|