இடருடைய
மனத்தினனாய்
எதிர்கோயில்
முன்னுறங்கி
அடர்கதிரோன் எழுமுனெழுந்
தாறுணர்ந்து
நடந்திடுமால்.
(சொ - ள்.) சுடர் மறைய ஊர் அகத்து துயில்வதற்கு ஆர்இடம் கொடுப்பார்
படர்வழி செல் நமக்கு இவ் ஊர் பழக்கம் உடையார் இலர் என்று - பகலவன்
மறைந்தனனாக இவ்வூர்க்கண்ணுள்ள மனையகங்களில் தூங்குவதற்கு இடங்கொடுப்பார்
யாவருளர், நீண்ட வழியிற் செல்லுகின்ற நமக்கு இந்த ஊரில் அறிமுகமுடையார்
யாரும் இலரே என்று நினைத்து, இடர் உடைய மனத்தினனாய் எதிர் கோயில் முன்
உறங்கி - துன்பமுள்ள மனத்துடன் கோயிலுக்கு முன்னிடத்தில் படுத்து உறங்கி, அடர்
கதிரோன் எழும்முன் எழுந்து ஆறு உணர்ந்து நடந்திடும் - வெயிலால் வருத்தும்
சூரியன் உதிக்குமுன்னே எழுந்து வழியறிந்து நடந்தான் (குசேலன்).
(வி - ம்.) யார் என்பது ஆர் என மரூஉவாயிற்று. படர் வழி -
செல்லும் வழி
எனவும் பொருள் தரும். அடர்தல் - வருத்துதல். அடர்கதிரோன் : வினைத்தொகை.
படர்வழி - பரந்த வழிச்செல்லும் வழியெனவும் கூறலாம் ; பொருட் சிறப்பின்று ; எதிர்
கோயில் ; எதிர்ப்புறம் உள்ள கோயில் ; எதிரே தோன்றும் கோயில் என விரிக்க.
(189)
கானவேல் முள்தைக்துக்
காலூன்ற முடியாமல்
ஈனமார் முள்வாங்குங்
கருவியுமங் கில்லாமல்
மானமார் பெருந்தவத்தோன்
மனமெலிந்து
முகம்புலந்தோர்
தானமே வுறவிருந்துள்
ததையஇவை எண்ணுவான்.
(சொ - ள்.) கானவேல் முள் தைத்து கால் ஊன்ற முடியாமல் ஈனம்
ஆர் முள்
வாங்கும் கருவியும் அங்கு இல்லாமல் - காட்டின்கணுள்ள வேல்முட்கள் தைத்ததனால்
கால்கள் நிலத்தில் ஊன்றி நடக்க வியலாமலும், அற்பமாகிய முள்ளை (வெளியில்)
வாங்கி எடுத்தற்கு ஆன கருவி (முள் வாங்கியும்) அவ்விடம் கிடைக்கப்பெறாமலும்,
மானம் ஆர் பெருந்தவத்தோன் மனம் மெலிந்து முகம் புலந்து - பெருமை பொருந்திய
சிறந்த தவமுடைய குசேலன் மனம் வருந்தி முகம் வாடி, ஓர்தானம் -
|