பக்கம் எண் :

160 குசேலோபாக்கியானம்

     இதுதெரிந்தும் மனையாட்டி
          இயம்பியசொற் குடம்பட்டு
     முதுவெயிலால் உடல்வருந்தி
          மூர்ச்சித்து மெலிகின்றேன்
     கதுமெனப்பல் காவதங்கள்
          கடந்தேன்வண் துவரைநகர்
     எதுவெனக்கேட் டிடிலெவரும்
          இன்னுநெடுந் தூரமென்பார்.

   (சொ - ள்.) இது தெரிந்தும் மனையாட்டி இயம்பிய சொற்கு உடம்பட்டு முது
வெயிலில் உடல் வருந்தி மூர்ச்சித்து மெலிகின்றேன் - இதனை யறிந்திருந்தும்
மனைவியானவள் கூறிய மொழிக்கிசைந்து முதிர்ந்த வெய்யிலினால் உடல் வாட
மூர்ச்சையடைந்திளைக்கின்றேன்; கதுமென பல் காவதங்கள் கடந்தேன் வண்துவரை
நகர் எது என கேட்டிடில் எவரும் இன்னும் நெடுந்தூரம் என்பார் - விரைந்து நடந்து
பல காதவழியைக் கடந்து 'வளமுடைய துவாரகை நகர் எங்குள்ளது?' என்று வினவினால்
இன்னும் நெடுந்தூரமுள்ளது என்கின்றனர்.

   (வி - ம்.) எத்தனையோ காவதம் கடந்து வந்தும் இன்னும் நெடுந்தூரம் இருக்கிறது
என்று கூறுவதை எண்ணி மிகவும் வருந்தினான் குசேலன் என்பது.            (192)

     மற்றைவழி யுங்கடக்க
          வலியின்றோர் விதத்தினால்
     உற்றிடினுங் கருங்கடல்யார்
          உதவிகொடு கடந்திடுவேன்
     பொற்றஅது கடப்பினுமப்
          புரத்திலெனை யார்மதிப்பார்
     சற்றுமுண ராதுவழி
          தலைப்பட்டேன் என்செய்தேன்.

   (சொ - ள்.) மற்றை வழியும் நடக்க வலிஇன்று ஓர் விதத்தினால் உற்றிடினும்
கருகடல் யார் உதவி கொடு கடந்திடுவேன் - மேலுமுள்ள வழியைக் கடந்து
செல்லுமாற்றலே யில்லை, ஒருவாறு கடப்போ மெனினும் கரிய கடலை யாருதவிகொண்டு
கடந்திட வல்லேன்; பொற்ற அது கடப்பினும் அப்புரத்தில் எனை யார் மதிப்பார்
சற்றும் உணராது வழிதலைப்பட்டேன் என் செய்தேன் - அழகான அக் கடலைக்
கடந்திட்டாலும் அந்தப்