பக்கம் எண் :

164 குசேலோபாக்கியானம்

2. குசேலர் துவாரகை கண்டு தம்
நகர்ப்புறம் அடைந்தது
கடவுள் வணக்கம்

பஃறொடை வெண்பா

     பூமேவு நான்முகத்தோன் போற்றித் துதிப்பதுவுந்
     தேமேவு பைந்துளவஞ் சேரக் கமழ்வதுவும்
     மாமேவு மாமறைகள் வாழ்த்தப் பொலிவதுவுந்
     தாமேவும் வஞ்சச் சகடம் உதைத்ததுவுந்
     தீமேவு ஆரணியஞ் சென்று திரிந்ததுவுந்
     தூமேவும் அன்பருளந் தோன்றப் பயில்வதுவும்
     பாமேக வண்ணன் பதம்.

   (சொ - ள்.) பூ மேவும் நான்முகத்தோன் போற்றித் துதிப்பதுவும் - திருமாலின்
உந்தித் தாமரையில் தோன்றியவனாகிய நான்கு முகங்களையுடைய பிரமதேவன் பணிந்து
புகழ்வதும்; தேமேவும் பைந்துளவம் சேரக் கமழ்வதுவும் - தேன் பொருந்திய பசிய
திருத்துழாய் சேர்ந்து மணம் வீசுவதும் ; மாமேவும் மாமறைகள் வாழ்த்தப் பொலிவதுவும்
- சிறப்புப் பொருந்திய பெரிய மறைகள் வாழ்த்த விளங்குவதும் ; தாமேவும் வஞ்சச்
சகடம் உதைத்ததுவும் - வலிமை பொருந்திய வஞ்சகமுற்ற சகடாசுரனை உதைத்து
அழித்ததும் ; தீமேவும் ஆரணியம் சென்று திரி்ந்ததுவும் - நெருப்புப் பொருந்திய
காட்டிற்போய் அலைந்ததும் ; தூமேவும் அன்பர் உளம் தோன்றப் பயில்வதுவும் -
தூய்மை பொருந்திய அன்பர்களின் உள்ளம் விளங்கப் பழகியிருப்பதும் ; பாமேக
வண்ணன் பதம் - பரவுகின்ற மேகத்தின் நிறம் உடையவனாகிய திருமாலின் திருவடியே.

   (வி - ம்.) தொண்டர்கள் திருமால் பாதத்தில் திருத்துழாய் இட்டுப் பூசை புரிவதால்
"பைந்துளவம் சேரக் கமழ்வதுவும்" என்றார். திருமாலின் திருவடிச் சிறப்பை விளக்கியது
அத்தகைய திருவடியை வணங்கி இந்நூலைப் பாடுகின்றேன் என்பது குறிப்பாம். திருமால்
உந்திக் கமலப் பூவிற் பிறந்தோன் பிரமன் ஆதலால் அவனை "பூமேவும்
நான்முகத்தோன்" என்றார். தன்னைப் பிறப்பித்த நன்றி கருதிப் பிரமன் போற்றித்
துதிப்பான் என்னும் கருத்தினால் "போற்றித் துதிப்பதுவும்" என்றார். அன்பர்