பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்165


உள்ளத்தி்ல் நீங்காது இருப்பதால் "தோன்றப் பயில்வதுவும்"என்றார். கஞ்சனால்
அனுப்பப்பட்ட சகடாசுரன் வண்டியாகி வந்து கண்ணனைக் கொல்லச் சமயம் நோக்கி
யிருந்தான். அதனையறிந்து அவ் வண்டியைக் காலால் உதைத்துத் தூளாக்கி
அவ்வசுரனைக் கொன்றான் என்பது கண்ணன் வரலாறு; அச் செய்தியை யுட்கொண்டு
"வஞ்சச் சகட முதைத்ததுவும்" என்றார். பூ - மலர் ; பொலிவு. தே - தேன், மா -
சிறப்பு, மகிமை, பெருமை. தூ - தூய்மை. தா - வலிமை. பா - பரவிய.   (198)

  ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வந்த ஆசிரியத் தாழிசை
     நீரார்பைங் கொண்டல் நிகர்திருமே னிப்பெருமான்
     பாரார நின்றசெழும் பங்கயச்செம் போதடிகள்
     தேர்வார் வினையிருட்குச் செங்கதிரோன் என்பரால்.

     காயாம்பூ வொத்த கதிர்த்திருமே னிப்பெருமான்
     பாயா ரணமணக்கும் பங்கயச்செம் போதடிகள்
     ஆய்வார் வினைவாரிக் கார்வடவை என்பரால்.
     வற்றாக் கடல்நேர் வருதிருமே னிப்பெருமான்
     பற்றார் கழலொலிக்கும் பங்கயச்செம் போதடிகள்
     உற்றார் வினையரவுக் கோருவணம் என்பரால்.

   (சொ - ள்.) நீர் ஆர் பைங் கொண்டல் நிகர் திருமேனிப் பெருமான் - நீர்
நிறைந்த பச்சை மேகத்தை ஒத்த அழகிய உடம்பையுடைய திருமாலின், பார் ஆர
நின்ற செழும் பங்கயம் செம்போது அடிகள் - நிலத்திற் பொருந்த நின்ற செழித்த
செந்தாமரை மலர் போன்ற திரு அடிகள் ; தேர்வார் வினை இருட்கு செங்கதிரோன்
என்பரால் - தெளிந்த அன்பர்களுடைய வினையாகிய இருளுக்கு செம்மையான
ஒளியையுடைய ஞாயிறு என்று சொல்வார். ஆல் : அசை.

   காயாம்பூ ஒத்த கதிர் திருமேனி பெருமான் - காயாமலரை நிகர்த்த ஒளியையுடைய
அழகிய மேனியைக் கொண்ட திருமாலின், பாய் ஆரணம் மணக்கும் பங்கயம் செம்போது
அடிகள் - பரந்த திருமறையின் மணம் வீசுகின்ற செந்தாமரை மலர் போன்ற திருஅடிகள்,
ஆய்வார் வினை வாரிக்கு ஆர்வடவை என்பவர் ஆல்- ஆராய்ந்து கண்ட
அடியார்களுடைய வினையாகிய கடலுக்குக் கொடிய வடவைத் தீ என்று சொல்வார்.
ஆல் : அசை.

   வற்றா கடல் நேர்வரு திருமேனி பெருமான் - வற்றுதலில்லாத கடலுக்கு ஒப்பாக
விளங்குகின்ற திருமேனியையுடைய