திருமாலின், பற்று ஆர் கழல் ஒலிக்கும்
பங்கயம் செம்போது அடிகள் - பற்றுதல்
பொருந்திய வீரக்கழல்கள் ஒலிக்கின்ற செந்தாமரை மலர் போன்ற திரு அடிகள், உற்றார்
வினை அரவுக்கு ஓர் உவணம் என்பர் ஆல் - (அன்பாகி) அடைந்தவர்களுடைய இரு
வினையாகிய பாம்புக்கு ஒப்பற்ற கருடன் என்று சொல்லுவார்கள்.
(வி - ம்.) பூவுலகம் முழுவதும் ஓரடியால் அளந்தபோது நிறைந்து நின்றது
கருதி
"பார் ஆர நின்ற" என்றார். பெருமான் - கடவுள். கொண்டல் - மேகம், காயாம் பூ,
கடல் திருமாலின் நீல நிறத்திற்கு உவமைப் பொருள்கள். தேர்வார், ஆய்வார் உற்றார்
என்ற மூன்றும் தொண்டர் என்ற பொருளையே தந்தன. தேர்வார் என்பது திருமாலே
கடவுள் தெளிந்தவர் எனவும் ஆய்வார் என்பது ஆராய்ந்து திருமாலே கடவுள் எனக்
கண்டவர் எனவும் அடியார்களை யுணர்த்தின. வினையை இருளாகவும், கடலாகவும்,
பாம்பாகவும் உருவகஞ் செய்தார். அதற்கு ஏற்ப முறையே ஞாயிறாகவும் வடவைத்
தீயாகவும் கருடனாகவும் அடிகளை உருவகஞ் செய்தார். அடிகளாகிய செங்கதிரோன்,
வினையாகிய இருளைத் தொலைக்கும் அடிகளாகிய வடவைத் தீ, வினையாகிய கடலை
வற்றச்செய்து தொலைக்கும் ; அடிகளாகிய கருடன், வினையாகிய பாம்பைத் தொலைக்கும்
என்று உருவகப் பொருள்களை விரித்துப் பொருள் காண்க. வினையைத் தொலைத்துப்
பிறப்பறுத்து முத்தியடைவிக்கும் திருமாலின் பாதம் ஆதலால், அப் பாதங்களை நான்
வணங்கி இந்நூல் பாடுகின்றேன் என்பது குறிப்பு. (199)
வெள்ளொத்தாழிசை
திண்ண மென்று தீய தீர
எண்ணம் ஒன்றி யென்றும் உள்வர்
கண்ணன் கமலக் கழல்.
(சொ - ள்.) கண்ணன் கமலம் கழல் - திருமாலின் தாமரைப் பூப்போன்ற
பாதங்களை, தீய தீர - தீமையானவை நீ்ங்குவது, திண்ணம் என்று - உறுதி என்று
மனத்திற்கொண்டு, எண்ணம் ஒன்றி என்றும் உள்வர் - நினைவு பொருந்தி எக்காலத்தும்
நினைத்திருப்பர்.
(வி - ம்.) திருமாலின் பாதம் இரண்டும் உறுதிப் பொருள் என்று
தீங்கு நீங்குமாறு
நினைத்து வணங்குவார் அன்பர்கள்; யானும் அவ்வாறு வணங்குகின்றேன் என்பது
கருத்து. (200)
|