பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்167


               ஒருபொருள் மேல் மூன்றடு்க்கிவந்த வெள்ளொத்தாழிசை
     பற்றிற் பழுதியற்றும் பந்தத் துழல்நெஞ்சே
     செற்றச் சகடுதைத்தான் தாள்குறியா தென்கொலோ
     முற்ற ஒழிந்து விடல்.
     துன்று பவம்விளைக்கும் பந்தத் துழல்நெஞ்சே
     கன்று குணில்கொண்டான் தாள்குறியா தென்கொலோ
     என்றும் ஒழிந்து விடல்
     நந்தும் வினைக்கிடனாம் பந்தத் துழல்நெஞ்சே
     உந்தி மருதிடந்தான் தாள்குறியா தென்கொலோ
     வந்தோ ஒழிந்து விடல்.

   (சொ - ள்.) பற்றின் பழுது இயற்றும் பந்தத்து உழல் நெஞ்சே - பற்றுதலாற்
குற்றத்தைச் செய்கின்ற பிறவிக் கட்டிற் பட்டு வருந்துகின்ற மனமே ; செற்றம் சகடு
உதைத்தான் தாள் குறியாது என்கொலோ முற்ற ஒழிந்துவிடல் - சினமுற்று வந்த
சகடாசுரனைக் காலால் உதைத்து அழித்தவனாகிய கண்ணபிரான் திருவடிகளைக் கருதாமல்
முழுதும் ஒழிந்திருத்தல் என்ன பயனுடையதோ ?

   துன்று பவம் விளைக்கும் பந்தத்து உழல் நெஞ்சே - நெருங்கிய பிறப்பை
உண்டாக்குகின்ற பாசக்கட்டால் அலைந்து திரிகின்ற மனமே ! கன்று குணில் கொண்டான்
தாள் குறியாது என்கொலோ என்றும் ஒழிந்துவிடல் - கன்றைக் குறுந்தடியாகக் கொண்ட
கண்ணபிரானது திருவடிகளைச் சிந்தியாதிருந்து விடுதல் என்ன பயனுடையதோ ?

   நந்தும் வினைக்கு இடன் ஆம் பந்தத்து உழல் நெஞ்சே - பெருகுகின்ற வினைக்கு
இடமாயிருக்கின்ற பாசக்கட்டால் அலைந்து திரிகின்ற மனமே ! உந்தி மருது இடந்தான்
தாள் குறியாது என்கொலோ அந்தோ ஒழிந்துவிடல் - உரலைத் தள்ளிச் சென்று மருத
மரத்தைப் பிளந்த கண்ணபிரானது திருவடிகளை நினையாமல் ஐயோ கெட்டழிதல்
என்ன பயனுடையதோ ?

   (வி - ம்.) இம்மூன்றும் ஒரு பொருள்மேல் வந்தன. நெஞ்சே! திருமால் திருவடிகளை
வணங்காது ஒழிந்திருத்தல் என்ன பயனுடையதோ ? ஒரு பயனும் இல்லாத செயல்
ஆதலால் அவனடி மலரை வணங்கி வாழ்வாய் நெஞ்சே என்று நெஞ்சிற்