கறிவுறுத்தியது இது. பந்தத்துள் கிடந்து
உழல்வதிற் பயனில்லை. முத்திப் பயன்பெறத்
திருமாலை வணங்குவாய் என்பது. (201)
வெளி
விருத்தம்
வேதந் தெரித்தானும் வேதத்திற்
குள்ளானுங் கண்ணன்போலும்
போதந் தருவானும் போந்தொளியாய்
நிற்பானுங்
கண்ணன் போலும்
ஏதந் தவிர்ப்பானும் எவ்வுயிருங்
காப்பானுங்
கண்ணன்போலும்.
(சொ - ள்.) வேதம் தெரிந்தானும் வேதத்திற்கு உள்ளானும் கண்ணன்
போலும் -
மறைகளை அறிவுறுத்தியவனும் அம் மறைகளுக்குள்ளிருப்பவனும் கண்ணபிரானே
யாவான்; போதம் தருவானும் போந்து ஒளியாய் நிற்பானும் கண்ணன் போலும் -
மெய்யுணர்வைக் கொடுப்பவனும் ஒளியாகப் பொருந்தி நிற்கின்றவனும் கண்ணபிரானே
யாவன்; ஏதம் தவிர்ப்பானும் எவ்வுயிரும் காப்பானும் கண்ணன் போலும் - குற்றங்
கெடுப்பவனும் எல்லா உயிர்களையும் காக்கின்றவனும் கண்ணபிரானேயாவன்.
(வி - ம்.) கண்ணனே கடவுள்; எல்லாச் செயல்களும் அக் கடவுள்
அருளால்
நிகழ்கின்றன; வேறு கடவுள் உண்டு என்று நினைப்பது பேதைமை; அவனையே
வணங்கி அவனருள் பெற்று வாழ்வதுவே சிறந்த அறிவாம் என்று தன் நெஞ்சிற்கும்
பிறர்க்கும் அறிவுறுத்தியது இது: ஏதம் - துன்பம் எனவும் கொள்ளலாம். (202)
அறுசீரடி
யாசிரிய விருத்தம்
முற்றா இளமென் தளிர்க்கரத்தால்
முனிவி லாது
மெல்லெனச்செம்
பொற்றா மரையிற் குடியிருக்கும்
பூவை வருடுந்
தொறுஞ்சேக்கும்
விற்றார் அணிநற் பதமிரண்டும்
வியன்மா நிலந்தீண்
டிடநடந்து
கற்றா மேய்த்த சிற்றாயன்
காமர் சீர்த்தி
வாழியவே.
(சொ - ள்.) முற்றா இளமென் தளிர் கரத்தால் முனிவு இலாது மெல்
என செம்
பொன்தாமரையில் குடியிருக்கும் பூவை -
|