பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்169


முதிராத இளமையான மெல்லிய தளிர் போன்ற கையால் வெறுப்பில்லாமல் மெதுவாக
சிவந்த அழகிய தாமரை மலரில் தங்கியிருக்கும் இலக்குமிதேவி, வருடும் தொறும்
சேக்கும் வில்தார் அணி நல் பதம் இரண்டும் - தடவும்பொழுதெல்லாம் சிவக்கின்ற
ஒளிவிடுகின்ற பூமாலை யணிந்துள்ள குற்றமற்ற திருவடிகள் இரண்டும், வியன் மாநிலம்
தீண்டிட நடந்து - விரிந்த பெரிய தலையைப் பொருந்தும்படி நடந்து, கன்று ஆ
மேய்த்த சிற்றாயன் காமர் சீர்த்தி வாழிய - கன்றோடு கூடிய பசுக்களை மேயச் செய்த
சிறிய இடையனாகிய கண்ணனின் அழகிய பெரும் புகழ் வாழிய.

   (வி - ம்.) தாமரைப் பூவில் வீற்றிருக்கும் பூவை எனவே அவள் மிகவும்
மென்மையுடையாள் என்பதும், முற்றாத தளிர் இளந்தளிர் மெல்லிய தளிர் எனத்
தளிரைச் சிறப்பித்தலால் அத்தளிர் மிகவும் மென்மையுடையது எனவும், அதுபோன்ற
கை எனவே கையும் மென்மையுடையது எனவும், விளங்கின. அம் மெல்லிய கையால்
மெல்லென முனிவின்றி வருடினும் சேக்கும் என்று திருவடியின் மென்மையை முதலில்
விளக்கினார். வியன் மாநிலம் என்று பூமியைச் சிறப்பித்து அதில் அடி தீண்டும் படி
நடந்து கற்றா மேய்த்தவன் எனக் கண்ணன் பெருமையை விளக்கினார். சிறிய ஆயனாகப்
பிறந்து பூமி பாரந் தீர்க்கவந்தான் என்பதும் இச் செயல் அவன் கருணையால் என்பதும்
குறிப்பால் விளக்கின.                                                  (203)

               வேறு
     பலதலை அனந்த னோடெண்
          பகடுமெய்ப் பாறி நிற்ப
     மலர்தலை உலகந் தாங்கும்
          மாலையந் தடந்தோள் வேந்தே
     குலமறை உணர்ச்சி மிக்க
          குசேலன்சென் றிறுக்கப் பட்ட
     நலமலி நெய்தல் சார்ந்த
          நளிர்கடல் வளமிக் கன்றே

   (சொ - ள்.) பல தலை அனந்தனோடும் எண்பகடும் எய்ப்பு ஆறி நிற்ப - பல
தலைகளையுடைய ஆதிசேடனுடன் திசையானைகள் எட்டும் (பூமியைச் சுமத்தலாலாகும்)
இளைப்புத் தணியும்படி, மலர்தலை உலகம் தாங்கும் மாலை அம் தடம்தோள் வேந்தே
- பரந்த இடத்தையுடைய உலகத்தைக் காக்கின்ற வெற்றி மாலை அணிந்த அழகிய
பெரிய தோள்களையுடைய மன்னனே, குலமறை