பக்கம் எண் :

170 குசேலோபாக்கியானம்

உணர்ச்சி மிக்க குசேலன் சென்று இறுக்கப்பட்ட நலமலி நெய்தல் சார்ந்த - சிறந்த
மறைகளின் அறிவு மிகுந்த குசேலன் என்னும் அன்பன் போய்த் தங்கியிருப்பதான
நன்மை நிறைந்த நெய்தல் நிலத்தை அடுத்த, நளிர் கடல் வளம் மிக்கன்றே -
குளிர்ந்த மேல் கடலானது வளம் சிறந்தது.

   (வி - ம்.) முன் ஆறு பாடல்களாலும் கடவுள் வாழ்த்துக் கூறி, இக் கவியில்
எஞ்சிய கதைப்பகுதி கூறத் தொடங்குகின்றார் நூலாசிரியர். இக் கதைத்
தொடக்கத்திற் சுகமுனிவன் பரீட்சித்து மன்னனுக்குக் கூறியது என்று விளக்கி
இடையிடையே சுகமுனிவர் அம் மன்னனை விளிப்பது போலவும் அவன்
வினவுவதுபோலவும் கூறு முறைப்படி இக் கவியிலும் வேந்தே என விளித்தார். பின்
குசேலன் தங்கிய மேல்கடல் வளமிக்கது ; அதன் சிறப்புக் கூறுகின்றேன் என்று
முனிவர் கூறுவதுபோல நூலாசிரியர் கூறினர்.
                                                            (204)

     சீருறு சங்கம் வாய்ந்து
          செழுங்குவ லயமுண் டாக்கி
     ஓருறு கமடம் மீனம்
          உருவங்கொண் டுயிர்கள் ஓம்பி
     ஏருறு பவளச் செவ்வாய்
          இயைந்துபொன் புணர்ந்து தண்ணென்
     காருறு நிறமுங் காட்டிக்
          கண்ணனைத் துணையும் வாரி.

   (சொ - ள்.) வாரி சீர்உறும் சங்கம் வாய்ந்து - கடலானது, சிறப்பு வாய்ந்த
சங்கங்களைப் பொருந்தி, செழும் குவலயம் உண்டாக்கி - செழித்த குவளை
மலர்களை உண்டாக்கி, ஓர்உறு கமடம் மீனம் உருவம்கொண்டு உயிர்கள் ஒம்பி -
ஆராய்தற்குரிய ஆமை மீனம் என்ற வடிவத்தையுடைய உயிர்ப்பொருள்களைக்
கொண்டு பல வுயிர்களையுங் காத்து, ஏர்உறு பவளம் செவ்வாய் இயைந்து பொன்
புணர்ந்து - அழகு பொருந்திய பவளத்தை யுடைய செம்மையான இடம்
பொருந்திப் பொன்னைச் சேர்ந்து, தண்என் கார்உறு நிறமும் காட்டி - குளிர்ச்சி
பொருந்திய மேகத்தின் மிக்க வண்ணத்தைக் காண்பித்து, கண்ணனைத் துணையும் -
கண்ணபிரானை ஒக்கும்.

   கண்ணனுக்குக் கூறும்போது "சிறப்பான பாஞ்சசனியம் என்ற சங்கம் கையிற்
பொருந்த, வளமான பூமியை (உந்திக் கமலத்திலிருந்து) உண்டாக்கி,
ஆராய்வதற்குரிய ஆமை மீனம் ஆகிய உருவத்தைக்கொண்டு பல உயிர்களையும்
காத்து, அழகிய