பவளம் போலச் சிவந்த வாய்பொருந்தித்
திருமகளைப் புணர்ந்து, குளிர்ந்த மேகம்
போன்ற வண்ணத்தைக் காட்டி" என்று பொழிப்புரை கூறி ஒப்புக் காண்க.
(வி - ம்.) வாரி - கடல், துணையும்-ஒக்கும். கடல், கண்ணனை
ஒக்கும் என
எழுவாய் பயனிலை கொள்க. குவலயம்-பூமி, குவளைப் பூ. கமடம் - ஆமை. பல
ஆறு பொன்னின் பொடிகளைக் கொண்டு போய்க் கடலிற் போடுவதால் "பொன்
புணர்ந்து" என்றார். புணர்ந்து - சேர்ந்து, செவ்வாய் - செம்மை + வாய் =
செவ்வாய் - செம்மையாகிய இடம். வாய் - இடம். திருமால் அமுதங் கடையும்
நாளில் மந்தர மலையைக் கடலுட்போட அது உள் அமிழ்ந்தியது. அப்போது
ஆமை வடிவங்கொண்டு கடலுட் சென்று அம் மலைக்கு அடைகல்லாக இருந்தார்.
மந்தரமலையைத் தாங்கியது அவ்வாமை என்பர். சோமுகாசுரன் வேதங்களைச்
சுருட்டி யெடுத்துக் கொண்டு கடலுட் சென்று மறைந்தான். அவனைக்
கொல்வதற்காக மீன் வடிவாகிச் சென்றார்.
(205)
வாங்குதெண் கடலில் மீனம்
முதலுயிர் மருவ
லாலே
வீங்கிய புலவு மாற்றி
மிளிர்தரப்
பூத்த நெய்தல்
தேங்கிய மணங்கான் றான்ற
சிறப்பினைச்
செய்யுந் தம்மைத்
தாங்குறு களைகண் ஆனோர்
தம்பழி மறைப்பார்
போல.
(சொ - ள்.) தம்மை தாங்குறு களைகண் ஆனோர் தம்பழி மறைப்பார்
போல -
தங்களைத் தாங்கும் துணையாயிருப்பவர்களின் பழியை மறைக்கின்ற
பெரியவர்களைப்போல, வாங்கு தெண் கடலில் மீனம் முதல் உயிர் மருவலாலே வீங்கிய
புலவு மாற்றி - வளைந்த தெளிந்த கடலில் மீன் முதலிய உயிர்கள் தங்கியிருப்பதனால்
மிகுந்த புலால் நாற்றத்தைப் போக்கி, மிளிர்தரப் பூத்த நெய்தல் தேங்கிய மணம்
கான்று ஆன்ற சிறப்பினைச் செய்யும் - விளங்கும்படி பூத்திருக்கின்ற நெய்தற் பூக்கள்
நிறைந்த மணத்தை வெளிப்படுத்தி மிகுந்த சிறப்பைச் செய்யும்.
(வி - ம்.) மீனம் முதல் உயிர் என்றது தவளை, முதலை, இப்பி,
சங்கு முதலிய
பலவகை உயிர்ப்பொருளையும் குறித்தது. எல்லாவற்றிலும் புலால் நாற்றம் இருப்பது
இயற்கை. நெய்தல் என்ற கொடி நீர்நிலைகளிற் பூத்திருக்கும். அது தாமரை அல்லி
போன்றது. அதன் மலர் மணம்பொருந்தியது என்பதும் அம்மலர்
|