சிறப்புப்
பாயிரம்
அறுசீரடி
ஆசிரிய விருத்தம்
மாமேவு மணிமார்பன் மலரடிகள்
மருவுதிரு மனத்தி
னோன்பொற்
கோமேவு பொழிற்றிருவூர் அதிபதிசீர்க்
கருணீகர் குலவி
சேடன்
பாமேவு பெருஞ்சீர்த்தி மிகுநாரா
யணவள்ளல் பயந்த
மைந்தர்
தேமேவு மலர்மாலைக் கோவிந்த
முகில்சீனி வாசச்
செம்மல்.
(சொ - ள்.) மா மே வு மணிமார்பன் மலர் அடிகள் மருவு திரு
மனத்தினோன் - திருமகள் வாழ்கின்ற அழகிய திரு மார்பை உடையவனாகிய
திருமாலின் தாமரை மலர் போன்ற திருவடிகள் தங்கியிருக்கின்ற சிறந்த
மனத்தை உடையவனும் ; பொன்கோமேவு பொழில் திருவூர் அதிபதி -
அழகிய வான் அளாவிய சோலைகளால் சூழப்பெற்ற வளமுடைய திருவூருக்குத்
தலைவனும் ; சீர் கருணீகர் குலவிசேடன் - மேன்மையுள்ள கருணீகர்
குலத்திலுதித்த மேலான தன்மையுடையவனும் ; பாமேவு பெறுசீர்த்தி மிகு
நாராயண வள்ளல் - (ஆகிய) பாக்களிலமைந்த பெரும் புகழ் மிக்க நாராயண
வள்ளலானவன்; பயந்த மைந்தர் - பெற்ற புதல்வர்கள் ; தேமேவு மலர்மாலை
கோவிந்த முகில் சீநிவாச செம்மல் - தேன் நிறைந்த பூமாலை தரித்த
கோவிந்தன் என்னும் மேகம் போலும் வள்ளலும், சீநிவாசன் என்னும்
சிறந்தோனுமாவர்.
(வி - ம்.) சிறப்புப் பாயிரம் என்பது ஆக்கியோன் பெயர் முதலிய
பதினொரு
வகையையும் விளங்கக் கூறுவது : இக்கவியில் இக்கதையைப் பாடுமாறு கூறிய வள்ளல்கள்
இருவர் பெயரும் கூறப்பட்டது. திருமாலின் தொண்டனும் திருவூரின் தலைவனும்
ஆகிய நாராயண வள்ளல் பெற்ற மைந்தர் இருவர்; அவ்விருவரில் ஒருவன் பெயர்
கோவிந்தன் மற்றொருவன் பெயர் சீனிவாசன். இவ்விருவருமே குசேலோபாக்கியானம்
என்ற இந்நூலைப் பாடுவித்தோராவர் என அறிக: கருணீகர் குலத்திற் பிறந்தவர் இவர்
கள் என்றும் தெரிந்துகொள்க. செம்மல்-சிறந்தோன். நாராயண வள்ளல், சீநிவாசச் செம்மல்
என்பன இருபெயரொட்டு. (17)
|
|
|
|