(சொ ள்.) அயில்
விழி பகை ஆம் என்பது அறிந்து உயிர் செகுப்பார் போல -
வேல்போன்ற கண்களுக்குப் பகைப் பொருளாம் என்று தெரிந்து உயிரை அழிக்கின்றவர்
போல, குயில் மொழி பரவமாதர் குரைகடல் மீன்கள் போழ்ந்து வெயில்இடை உணக்கி
பின்னும் விற்று உளம் மகிழ்வார் - குயிலின் மொழிபோல் (இனிமையாக) பேசுகின்ற
பரவர்குல மாதர் ஒலிக்கின்ற கடலிலுள்ள மீன்களைப் பிளந்தும் வெயிலில் உணர்த்தியும்
பிறகு அவற்றை விற்பனை செய்தும் மனம் மகிழ்வார்கள், செயிர்உறு சீற்றம் தெவ்வை
சிதைத்து உளத்து உவகை செய்யார் யார் - வயிரம் பொருந்திய கோபத்தையுடைய
பகைவரை அழித்து மனதில் மகிழ்ச்சி கொள்ளாதவர் எவருளர் ? (ஒருவரும் இலர்.)
(வி - ம்.) விழிக்குப் பகை கயல்மீன்கள் எனக் கொள்க. கண்களை
யொத்திருப்பன
அம் மீன்களே. அவற்றை அறுத்துக் காயவைத்துப் பின் கருவாடு ஆக்கி விற்பது அம்
மகளிர் தொழில். அவர் இயற்கையாகச் செய்யுந் தொழிலைப் பகை என்றறிந்து செய்வதாகக்
கற்பித்தார். அதனால் தற்குறிப்பேற்றம் ஆம். செயிருறு யாரே எனப் பொதுப்பொருள்
கூறி முடித்தலால் வேற்றுப்பொருள் வைப்பணியும் சேர்ந்து நின்றது.
(208)
இணங்குகைத் தோணி ஏறி
எறிவலை வீசும்
ஆர்ப்பும
அணங்குறப் பட்ட பல்மீன்
அருங்கரை உய்க்கும்
ஆர்ப்பும்
உணங்கல்மீன் கவர்புள் ளோப்பும்
ஆர்ப்புமிக்
கோசை போக்கி
வணங்கநுண் ணிடையா ரம்மீன்
மாறிடும் ஆர்ப்பும்
மல்கும்.
(சொ - ள்.) இணங்கு கைதோணி ஏறி எறிவலை வீசும் ஆர்ப்பும்-இணைக்கப்பட்ட
சிறு தோணியில் ஏறி வலைகளை வீசுதலாலுண்டாகும் ஓசையும் ; அணங்கு உறப்பட்ட
பல்மீன் அரும்கரை உய்க்கும் ஆர்ப்பும் - வருந்தும்படி அகப்பட்ட பலவகை மீன்களை
அரிய கரையில் சேர்க்கும்போது உண்டாகும் ஓசையும், உணங்கல் மீன்கவர் புள்
ஓப்பும் ஆர்ப்பும் - உலர்த்தப்படும் மீன்களைக் கவரவரும் பறவைகளை ஓட்டுகின்ற
ஓசையும், வணங்கும் நுண் இடையார் அ மீன் மாறிடும் ஆர்ப்பும் - வளைந்த நுண்ணிய
இடையையுடைய அப் பெண்டிர் அம் மீன்களை விலைகூறி விற்கும் ஓசையும், மிக்குஓசை
போக்கி மல்கும் - மிகுந்த ஓசையைப் பரப்பி நிறையும்.
|