|
(வி - ம்.) மிக்கு
ஓசை போக்கி மல்கும் எனக் கூட்டுக. இவ் வொலிகள் மிகுந்து
மற்றையொலிகளை நீக்கி எங்கும் நிறையும் என்றும் கொள்ளலாம். ஆர்ப்பும் மிக்க
ஓசைபோக்கி - ஆர்ப்பும் ஆகிய மிகுந்த ஒலிகளையடக்கி. வணங்கும்...மாறிடும்
ஆர்ப்புமல்கும் - மகளி்ர் விற்கும் ஒலியே பெருகித் தோன்றும் எனவும் கொள்ளலாம்.
(209)
மீன்விலைக் கொளவச் சேரி
விருப்பொடு
புகுந்த மைந்தர்
வானவிற் போலும் நெற்றி
வலைச்சியர்
கண்மீன் பாய
மானமால் கொண்டன் னார்சொல்
வரம்பினைக்
கடவா ராகி
ஈனமிக் குறப்பொன் னெல்லாம்
ஈந்தளித் தவையே
கொள்வார்.
(சொ - ள்.) மீன் விலைகொள அ சேரி விருப்பொடு புகுந்த மைந்தர்
- மீனை
விலைகொடுத்து வாங்குவதற்காக அந்தப் பரதர் சேரியில் விருப்பத்துடன் சென்ற ஆடவர்,
வானவில் போலும் நெற்றி வலைச்சியர் கண்மீன் பாய - வானத்திலுள்ள இந்திரவில்லை
ஒத்த நெற்றி அமைந்த வலைமாதர்களின் கண்களாகிய மீன்கள் பாய்தலால், மானம்
மால்கொண்டு அன்னார் சொல்வரம்பினை கடவார் ஆகி ஈனம் மிக்குஉற - பெரிய
காம மயக்கத்தைக் கொண்டு அம் மாதர்கள் சொல்கின்ற (விலை) எல்லையைக் கடவாமல்
தாழ்வு மிகவும் பொருந்த, பொன் எல்லாம் ஈந்து அளித்தவையே கொள்வார் - பொருள்
எல்லாம் கொடுத்து அம் மாதர் கொடுத்த மீன்களையே வாங்கி்க் கொள்வார்.
(வி - ம்.) காம மயக்கத்தால் அம் மங்கையர் தந்த மீன்களையே
வாங்குவார்
என்பது. எவ்வளவு பொருள் கொடுத்தோம் என்பதும் மீன் எவ்வளவு என்பதும் நாம்
தந்த பொருளுக்கு இம் மீன்கள் பொருத்தமுள்ளனவா என்பதும், விலையுர்ந்தது தாழ்ந்தது
என்பதும் ஆராயாமல் மயக்கத்தால் அவர்கள் கூறிய விலையைக் கொடுத்து அவர்கள்
கொடுத்த மீன்களையே வாங்குவார் என்று மயக்க மிகுதி கூறிய இது. ஒரு பொருள்
விலைக்க வாங்கச்செல்வோர் விலைகேட்டு அவ் விலையிற் குறைத்துக் கொடுக்குமாறு
கேட்டு வாங்குவதும் பொருள் இவ் விலைக்குத் தக்கதா என்று ஆராய்ந்து வாங்குவதும்
உலகியல்பு. அதனை மறந்து மயங்கினர் என்பது இதனால் விளங்கிற்று.
(210)
|